சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பில் கலைவிழா 2015 முற்றிலும் பெண்களுக்குக்காகவே மட்டுமே நடக்கும் மகளிர் விழா (FEMFEST 15) மூன்று நாட்கள் நடைபெற்றது.
முதல் நாள் (12-2-2015) அன்று விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருமதி.ரெமிபாய் ஜேப்பியார் மகளிர் விழா கோப்பையை அறிமுகப்படுத்தினார்.
கௌதம் கம்பீர் அவர்கள் தான் கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டையை ஜேப்பியார் அவர்களுக்கு பரிசளித்தார்.
பல்கலைக்கழகங்களுக்கிடையே நடை பெற்ற கிரிக்கெட் போட்டியில் பெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு (சத்யபாமா அணிக்கு) கோப்பையை .கௌதம் கம்பீர் வழங்கினார்.
பல்கலைக்கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சிறப்பு ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டது.
மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் விழா (FEMFEST 15) 13-2-2015 மற்றும் 14-2-2015 அன்று நடைபெற்றது. பல்வேறு வகையான அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 3000 மாணவிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் அகில இந்தியாவில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற எட்டு பெண்மணிகளுக்கு INSPIRING ICONS 2015 விருதுகள் வழங்கப்பட்டது.
டாக்டர் திருமதி.மாதங்கி இராமகிருஷ்ணன் -குழந்தைகள் நல மருத்துவத்துறையில் பணியாற்றி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வருபவர்.
திருமதி இராமலட்சுமி- விஞ்ஞானி செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை குறைந்த செலவில் பயணிக்கச் செய்து தலை சிறந்த மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியாவின் பெருமைக்கு உதவிய 14 விஞ்ஞானிகளில் ஒருவர்.
இராதிகா ராமசாமி- இந்தியாவின் இருபது தலை சிறந்த புகைப்படக்கலைஞரில் ஒருவராக வன விலங்குகளின் புகைப்படங்களை எடுப்பதில் வல்லுநர்.
பத்மஸ்ரீ மாதுரி தீட்சீத் – நடிகையாக தன்னுடைய அழகாலும், நடனத்தாலும் பாலிவுட்டின் ராணியாக 20 வருடம் திகழ்ந்தவர்.
பத்மபூஷன் மேரி கோம்- குத்துச்சண்டை வீராங்கனை ஐந்து முறை குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் பெற்றவர். இவர் அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர்.
சுஜாதா பர்லா- தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக பிரபலமானவர்.
சகாரிகா கோஷ் – பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர். மிகப்பிரபலமான டைம்ஸ் ஆஃப் இந்தியா அங்கத்தின்; பெண் நிருபர்.
டாக்டர் பாம்பே ஜெயஸ்ரீ – கர்நாடக சங்கீதத்தில் கலைமாமணி மற்றும் சங்கீதா சூடாமணி விருது பெற்றவர்.
இவர்கள் அனைவருக்கும் முன்னோடியாய் திகழும் இமயங்கள் என்னும் விருது வழங்கப்பட்டது.
சிறந்த கூடைப்பந்து வீராங்கனையாக எம்.ஒ.பி வைஷ்ணவா கல்லூரியைச் சேர்ந்த செல்வி கே.கோமதி, சிறந்த விளையாட்டு வீராங்கனையாக எஸ்.எஸ்.ஆர். இன்ஜினியரிங் கல்லூரியைச் சேர்ந்த செல்வி ஹரிணி ஆகிய இருவருக்கும் ஸ்கூட்டியை சத்யபாமாவின் அசோசியட் பார்ட்னரான அக்சார் பெயிண்ட்ஸ் வழங்கி சிறப்பித்தனர்.
இறுதியாக பாஸ்கெட் பால் -இந்துஸ்தான் பல்கலைக்கழகத்திற்கும், த்ரோபால்-எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கும், வாலிபால்-சங்கரா பல்கலைக்கழகத்திற்கும் குத்துச்சண்டை வீராங்கனை மாரிகோம் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு திருமதி.ரெமிபாய் ஜேப்பியார் மகளிர் கோப்பையை வழங்கினார்.
முன்னதாக பத்மபூஷன் மேரி கோம் அவர்கள் தான் கையெழுத்திட்ட குத்துச்சண்டை கையுறையை, இயக்குனர்கள் மரிய ஜான்சன், மரிய ஜீனா ஜான்சன் முன்னிலையில் சத்யபாமா பல்கலைக் கழகத்தின் வேந்தர் திரு.டாக்டர். ஜேப்பியார் அவர்களுக்கு பரிசளித்தார்.
அனைத்து துறை வல்லுநர்களும் விருது பெற்றதும் மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சியும், பிரபல பின்னணி பாடகர்களான திரு. விஜய் பிரகாஷ் அவர்களின் இசை நிகழ்ச்சியும் கண்டுகளித்தது மகளிர் விழாவை மறக்க முடியாத விழாவாக மாற்றியது என்பது மிகையல்ல.
சத்யபாமா பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர். ஜேப்பியார் , இயக்குநர்கள் மரிய ஜான்சன், மரிய ஜீனா ஜான்சன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.