இநு நம்மவர்களுக்கு வழிகாட்டும் மொழிமாற்றுப்படம் எனலாம். தெலுங்கில் 2014-ம் ஆண்டு ‘ஐஸ்கிரீம்’ என்கிற பெயரில் வெளியான படத்தின் தமிழ் மொழிமாற்று வடிவம்தான் இந்த ‘சாக்கோபார்’.ஒரே பங்களாவில் இரவில் நடக்கும் கதை. நவ்தீப்- தேஜஸ்வினி நடித்துள்ளனர். ராம் கோபால் வர்மா இயக்கியுள்ளார். வர்மா படங்களில் ஏதாவது ஒன்று இருக்கும் .
மிகப் பெரிய வீடு. இரண்டு முக்கிய நடிகர்கள். 4 துணை நடிகர்களுடன் வெறும் இரண்டே கால் லட்சம் ரூபாய் செலவில் படு சிக்கனமாக எடுத்து முடிக்கப்பட்டது. படத்தின் வசூலோ 5 கோடிக்கும் மேல்.இந்தப்படத்தை இவ்வளவு சிக்கனமாக எடுத்துக் காட்டி நம்மூர் ஊதாரி இயக்குநர்களுக்குப் பாடம் சொல்லியிருக்கிறார்.
படத்தின் கதை என்ன?
புதிதாக வாங்கியுள்ள அந்தப் பங்களாவில் பெற்றோர் வெளியூர் சென்றிருப்பதால் தேஜஸ்வினி தனியே இருக்கிறார். அவரைப் பார்க்க வரும் காதலன் நவ்தீப் அங்கிருந்த ஒரு பொம்மையை உடைத்து விடுகிறார். அது அந்த வீட்டுக்காரர்கள் பரம்பரையாக பாதுகாத்து வந்தது. அதை உடைத்துவிட்டாயே என்கிறார். அது பொம்மைதானே என்று நவ்தீப் அலட்சியமாகக் கூறுகிறார். நவ்தீப் வெளியே சென்றவுடன் வீட்டுக்குள் அமானுஷ்ய சத்தம் கேட்கிறது. கதவு தட்டப்படுகிறது.குடிநீர் குழாயில் திறந்து நீர் தானாக ஊற்றுகிறது. பேய்க்கிழவி வந்து ப்யானோ வாசிக்கிறாள். இவை பிரம்மையா உண்மையா என்று பயத்தில் தேஜஸ்வினி தூங்கவேயில்லை.
காதலனுக்கு போன் செய்கிறார். வருகிறார் ஆனால் வருமுன் அவர் வந்தததாக உணர்கிறார். இரவு முழுக்க பயத்தில் நடுங்குகிறார். இறுதியில் ஒரு திடுக் முடிவு நிஜமாகவே பேய் வந்ததா? கற்பனையா?
படம் ஒரு பெரிய பங்களாவில் நடக்கிறது. உள்ளே ஒரு இளம் பெண் இடையிடையே சிறு பாத்திரங்கள். இவ்வளவை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு முழுப்படம் செய்ய முடியுமா? முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் ராம் கோபால் வர்மா .
தேஜஸ்வினியை பலவித கோணங்களில் காட்டி பயத்துடன் பார்ப்பவர்களை பெருமூச்சு விட வைத்து வெற்றி பெறுகிறார்.காட்சிப் பற்றாக்குறை ஏற்படும் இடங்களில்எல்லாம் கவர்ச்சியைக்காட்டி திறமையாக நிரப்பியிருக்கிறார்.
சிலகாட்சிகள் திரும்பத் திரும்ப வருவது சலிப்பு. குளியல் ,உடைமாற்றும் காட்சிகளே 5 முறை வருகின்றன.
இது போன்ற சில பலவீனங்களைத் தவிர்த்திருந்தால் ‘சாக்கோ பார்’ ‘ஆட்டம் பாம்’ஆ கியிருக்கும்.
எப்படியானாலும் இரண்டேகால் லட்சத்தில் ஒரு படம் எடுத்துக் காட்டி நம்மூர் ஊதாரி இயக்குநர்களுக்குப் பாடம் சொல்லியிருக்கிறார் ராம் கோபால் வர்மா ..