அர்னால்ட் கதாநாயகனாக மீண்டும் களமிறங்கும் ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ திரைப்படத்தை ஆலென் டெய்லர் அதிரடி பொழுதுபோக்கு திரைப்படமாக இயக்கியுளார். ஜூலை 3ஆம் தேதி வெளியாகவுள்ள ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’(Terminator Genisys) திரைப்படத்தில் புகழ் பெற்ற ‘கேம் ஆஃப் த்ரான்ஸ்’ (Game of Thrones) தொடரில் காலீசி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த எமிலியா கிளார்க் நடித்துள்ளார். எமிலியா இப்படத்தில் இவர் சாரா கானர் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.
ஆக்ஷன் மன்னன் அர்னால்டுடன் பணிபுரிந்தது பற்றி எமிலியா கூறுகையில் “அர்னால்ட் பழகுவதற்கு மிக எளிமையானவர், படப்பிடிப்பில் அனைவரிடமும் மிக அன்பாக நடந்து கொள்வார். அர்னால்டுடன் பணிபுரிவது மிகவும் உற்சாகமான அனுபவம் மட்டுமல்ல, மிகவும் இனிமையான அனுபவமும் கூட.“ என மகிழ்ச்சியுடன் கூறினார்.
இயக்குநர் ஆலென் பற்றி எமிலியா கூறும்பொழுது “ இப்படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததே இயக்குநர் ஆலென் டெய்லர்தான் காரணம். நான் முன்னர் நடித்த ‘கேம் ஆஃப் த்ரான்ஸ்’ (Game of Thrones) தொடரின் இயக்குநரும் அவரே. அவருடன் மீண்டும் இணைந்து பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்னிடமிருந்து எப்படி நடிப்பை பெற வேண்டும் என நன்கு அறிந்தவர் ஆலென்.” எனக் கூறினார்.
டெர்மினேட்டர் தொடர்களில் புதிய பாகமாய் வரும் ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ திரைப்படம் சாரா கானர் , ஜான் கானர் , கயில் ரீஸ் மற்றும் டென்ர்மினேட்டர்கள் ஆகிய கதாபாத்திரங்களின் மத்தியில் நடக்கும் கதையமைப்பைக் கொண்டது என்கிறார் இயக்குநர் ஆலென் டெய்லர்.
இந்தியா முழுதும் Viacom18 Motion Pictures நிறுவனம் விநியோகித்துள்ள ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ திரைப்படத்தை தமிழகமெங்கும் , பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கிய எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதன் ஜூலை 3 ஆம் தேதி வெளியிடுகிறார்.