சின்னத்திரை,என்பது கோவணம் மாதிரி, பெரியதிரை என்பது வேட்டி மாதிரி என்று ராதாரவி ஒரு படவிழாவில் ஐஅஉகஐஅவன
ணூஐஅஔகெனகூறினார்.
எஸ். ஜே.தளபதிராஜ் இயக்கத்தில் மீடியா மாஸ்டர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேரழகி’ . புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் பிரபு சாலமன் நடித்துள்ளார்.
தவறான ஒரு மருத்துவ அறிக்கையால் புரட்டிப் போடப்பட்ட வாழ்க்கையின் கதை இது.
தஞ்சைப் பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்திற்கு சாணக்யா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நடந்தது.
நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசும்போது “நான் வாட்ஸ்அப் எல்லாம் பார்ப்பது, படிப்பது இல்லை. நல்ல மாதிரி எழுதிவிட்டு கடைசியில் நாலுவரி சிலுமிஷமாக எழுதி விடுகிறார்கள். உலகத்திலேயே சோம்பேறிகள் யார் தெரியுமா? செல் போன் வைத்து எப்போதும் அதை நோண்டிக் கொண்டிருப்பவர்கள்தான். இதை நான் சொல்லவில்லை பில்கேட்ஸ் சொல்லியிருக்கிறார் இன்றைக்கு யாரும் செல்போனை கையில் வைத்துக் கொள்வதில்லை. அதற்கு ஒரு ஆள் வைத்துள்ளார்கள்.
இன்று தற்கொலை பெருக செல்போன், வாட்ஸ் அப் கள்தான் காரணம்.
இடைவிடாத படப்பிடிப்பில் இருந்த ஒரு நடிகன் மனைவிக்கு போன் செய்தான் . பதில் வந்தது என்ன தெரியுமா? இப்போ’து நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் ‘என்று குரல் வந்தது. அதிர்ச்சி அடைந்தவன் அவசரப்பட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டான் .இன்றைக்குப் பலரையும் தப்பாக யோசிக்க வைக்கிறது செல்போன்.
இதில் பிரபுசாலமன் நடித்திருக்கிறார். அவர் தப்பாக நினைக்கக் கூடாது, அவரவர் வேலையை அவரவர் பார்க்கவேண்டும். நடித்து இயக்கும் போது பல இயக்குநர்கள் கதையைக் கோட்டை விட்டு விடுகிறார்கள். ராம் கோபால் வர்மாவிடம் எப்போதும் இவ்வளவு பிஸியாக இருந்து கொண்டு படம் எடுக்கிறீர்களே. நீங்களாகவே ஒரு அவுட்டோர் யூனிட் வாங்கி பயன்படுத்தலாமே என்ற போது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?அவரவர் வேலையை அவரவர் பார்க்கவேண்டும் என்றார்.
இங்கே ரித்திஷ் வந்திருக்கிறார். நல்ல மனிதர். மற்றவர்களுக்கு உதவுகிறவர். நடிகர் சங்கத் தேர்தலில் எங்களுக்குள் மோதல் இருந்தது. அதை எல்லாம் மறந்து விட்டோம்.இப்போது ஒன்றாகிவிட்டோம்.ரித்திஷ் என்றும் என் தம்பிதான். நான் யாரையும் எதிரியாக நினைப்பதில்லை எனக்கு யார் மீதும் பகையில்லை . எனக்கு யார் மீதும் கோபமில்லை என்னைச் சீண்டினால்நான் சும்மா இருக்க மாட்டேன்.
நான் எப்போதும் வெளிபடையாகப் பேசுபவன்.எனக்கு 64 வயது ஆகிறது. நான் 62 வயதில் இறந்துவிடுவேன் என்று ஒரு ஜோஸயக்காரன் சொன்னான். ஆனால் நான் உயிரோடு இருக்கிறேன். அவன் இறந்து விட்டான் எனக்கு ஜாதகம் பார்த்தவன் அவனுக்குப் பார்க்க மறந்து விட்டான் .யார் எப்படி என்று யார் சொல்ல முடியும்?
நான் பிரபுசாலமன் நடத்திய பிரார்த்தனை கூட்டத்துக்குப் போனேன். அது ஒரு நல்ல விஷயம்.உடனே பிரபுசாலமன் மதமாற்றம் செய்கிறாரா என்று பேசுகிறார்கள். நானே மதம் பிடித்தவன் என்னை மாற்றி மதமாற்றம் செய்து விடுவார்களா?
இங்கே சின்னத்திரையிலிருந்து நிறைய பேர் வந்திருக்கிறார்கள்.
இந்தச் சின்னத்திரை, பெரியதிரைக்கு எவ்வளவோ உதவிகள் செய்து வருகிறது.
. மானத்தைக் காப்பாற்ற கோவணம்தான் உதவுகிறது. சின்னத்திரை மட்டும் இல்லை என்றால் சினிமாவில் பத்தாயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டு இருப்பார்கள். சின்னத்திரை,பத்தாயிரம் பேருக்கு வேலை கொடுத்திருக்கிறது . ஒருகாலத்தில் சின்னத்திரைக்கு எதிராக தயாரிப்பாளர்கள் பேசிய போது ஆதரவாக நான் தயாரிப்பாளர்கள் சங்கத்திலேயே சண்டை போட்டவன்.
இந்த தளபதி இரண்டு திரையிலும் வெற்றி பெற்றவர். ‘பேரழகி’ வெற்றிபெற வாழ்த்துகிறேன். ” என்றார்.