
இந்நிகழ்ச்சியில் ‘ஸ்கெட்ச்’ படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன் மற்றும் இயக்குநர் விஜய் சந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் நடிகர் விக்ரம் அவர்களின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றத்தின் தமிழக தலைவர் சூரிய நாராயணன் மற்றும் பொருளாளர் V கலையழகன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் சீயான் விக்ரம் ரசிகர்களுக்காக, இயக்குநர் D R உதயா என்பவர் இயக்கத்தில், சரண் குமார் இசையமைப்பில் உருவான ‘ஏனோ உந்தன் ரசிகன் நானோ’ என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டது.

தயாரிப்பாளர் பார்த்திபன் பேசும் போது,‘ விக்ரம் அவர்கள் சிறந்த நடிகர் என்ற அடையாளத்தைக் கடந்து சிறந்த பண்பாளர். அவரது பிறந்த நாளில் நடைபெறும் இந்த ரத்த தான முகாமில் கலந்துகொண்டதை அவர் எனக்களித்த கௌரவமாக கருதுகிறேன். ரசிகர்களை தங்களுடைய வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தாமல், சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட அறிவுறுத்தி வழிநடத்திச் செல்லும் சீயான் விக்ரம் அவர்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.’ என்றார்.
பின்னர் தென் சென்னை மாவட்ட விக்ரம் ரசிகர் மன்றத்தின் சார்பில் விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த தான முகாமில் திரளான ரசிகர்களும், ரசிகைகளும் தங்களது பெயரைப் பதிவு செய்து கொண்டு, இரத்த தானம் செய்தனர்