இது நிலம் சம்பந்தமான ரியல் எஸ்டேட் பற்றிய படம் அல்ல .குண்டு விளையாட்டைக் களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். குண்டு விளையாட்டில் பேந்தா,இஸ்டம், சாரமுட்டி சிறுவர்கள் மட்டுமே விளையாடுவது. இஸ்டம், ஒன்பது குழி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுவது. இந்த வரிசையில் விளையாடும் ஒரு இளைஞனின் பெயர் சம்பத்.
ஒன்பது குழி என்னும் அடைமொழி கொண்ட சம்பத்தின் அடைமொழிகேற்ப இந்த விளையாட்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இவ்விளையாட்டு பல ஊர்களில், பல பெயர்களில் விளையாடப்பட்டாலும் சோழர்கள் ஆண்ட நிலப்பரப்புகளான திருச்சி, தஞ்சை, இலங்கை இங்கு மட்டுமே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
சோழர்களின் தளமான திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் படபிடிப்பு நடத்தப்பட்டு அவர்களின் வட்டார வழக்கு, பயன்படுத்தி வரும் பொருட்கள் மற்றும் உடைகள் என அனைத்தும் அங்கே வாங்கி படமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், சிறு கேரக்டரில் நடித்த நடிகர்கள் கூட சொந்த குரலில் பேசப்பட்டு பதிவு செய்யபட்டுள்ளது. மேலும் படபிடிப்பு நடந்த இடத்தில் வரும் இயற்கையான சப்தங்களை பதிவுசெய்து, அதுவே சிறப்பு சப்தமாக பயன்படுத்தபட்டுள்ளது. படபிடிப்பு நாட்களுக்கு நிகரான ஒலிப்பதிவு ஒருங்கிணைப்பு நடந்துள்ளது.
எழுத்தாளர் கண்மனி குணசேகரன் ஒப்பாரி, அழிந்து வரும் பாரம்ரிய இசைக்கருவி தாரை என அனைத்தும் கவனிக்ககூடிய விஷயமாக இருக்கும். இப்படி மிகைப்எபடுத்தல் இல்லாமல் ஒரு கற்பனை கதையாக இருந்தாலும், ஒருவனின் வாழ்க்கை உண்மை சம்பவம் போலவே பதிவு செய்யப்பட்டுள்ளது.