ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் சர்வதேச அளவில் பிரபலமான அதிரடி சண்டை பயிற்சி இயக்குநர்கள் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் ஆறு அதிரடி ஆக்சன் இயக்குநர்கள் பணியாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக பட தயாரிப்பு குழுவினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் பகிர்ந்து கொண்டதாவது…
” ஜவான் படத்தின் சண்டை காட்சிகளுக்காக சர்வதேச அளவில் பிரபலமான ஆறு சண்டை பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் உலக அளவில் சிறந்த படங்களுக்கு வியப்பளிக்கும் வகையிலான சண்டை காட்சிகளை அமைத்துள்ளனர். ஜவான் பரந்த அளவிலான ஆக்சன் காட்சிகளை உள்ளடக்கிய திரைப்படம். இதில் கைகளால் தாக்கிக் கொள்ளும் சண்டைக் காட்சி… உற்சாகமூட்டும் பைக் காட்சிகள்… இதயத்தை தடதடவைக்கும் டிரக் மற்றும் கார் துரத்தும் காட்சிகள்… என பல வகையான சண்டைக் காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆக்ஷன் காட்சிகள் படத்தின் கதையோட்டத்திற்கு ஆழத்தையும், அழகையும் சேர்க்கின்றன. மிகச்சிறந்த சினிமா அனுபவத்திற்கு யதார்த்தத்திலிருந்து விதிவிலக்கான ஆறு அதிரடி சண்டை பயிற்சி இயக்குநர்களின் ஒன்றிணைக்கப்பட்ட திறமைகளுடன் தயாராகி இருப்பதால், ‘ஜவான்’ திரைப்படம் -மிக முக்கியமான.. அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது.
ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் உலக அளவில் சில சிறந்த அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களை தொடர்ந்து காண்போம்.
‘ஜவான்’ இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதியன்று வெளியாகும் மிகப்பெரிய ஆக்சன் என்டர்டெய்னர் படைப்பாகும். ஆக்சன் ஒரு காட்சி பொருளாக இருப்பதை உறுதி செய்வதற்கும், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுப்பதற்கும், ஆக்ஷன் காட்சிகளை வடிவமைப்பதில் தலை சிறந்த கலைஞர்களின் பங்களிப்பை தயாரிப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
‘ஜவான் திரைப்படத்தில் இடம்பெற்ற பரபரப்பான ஆக்சன் காட்சிகள்… உலகெங்கிலும் உள்ள மிகச்சிறந்த சண்டை பயிற்சி இயக்குநர்களின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கிறது. இந்திய சினிமாவில் ஆறு வெவ்வேறு அதிரடி சண்டை பயிற்சி இயக்குநர்கள் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படமாகும்.
சர்வதேச அளவில் அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு பெயர் பெற்ற ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் ஜவானில் இணைந்து பணியாற்றி, உலக அளவில் பார்வையாளர்களை கவரும் வகையிலான ஆக்சன் காட்சிகளை உருவாக்கி உள்ளனர்.
ஸ்பிரோ ரஸாடோஸ்- ‘தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ்’ , ‘கேப்டன் அமெரிக்கா’, ‘டீனேஜ் மியூட்டன்ட் நிஞ்சா டர்ட்டில்ஸ்’ போன்ற ஹாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த பங்களிப்புக்காக கொண்டாடப்பட்டவர்.
இவர் தன் அனுபவத்தைக் கொண்டு ‘ஜவான்’ படத்திற்கு சிறப்பான ஆக்சன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ‘ரா ஒன்’ படத்தில் பணியாற்றிய இவரது முந்தைய ஈடுபாடு.. இதற்கு முன்னதாக ஒரு சிறந்த படம் மற்றும் அற்புதமான வி எஃப் எக்ஸ் மற்றும் அதிரடிகளுக்காக பாராட்டை பெற்றவர். அவரது விதிவிலக்கான நிபுணத்துவம் இந்த படத்திலும் சான்றாக இருக்கிறது.
யானிக் பென்- அனுபவம் வாய்ந்த பார்கூர் ஆசிரியராக அங்கீகரிக்கப்பட்ட இவர், ஹாலிவுட் படங்களுக்கும் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களுக்கும் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளை அமைத்துள்ளார். மேலும் ‘டிரான்ஸ்போர்ட்டர் 3’, ‘டன்க்ரிக்’, ‘இன்செப்ஷன்’, ‘ரயீஸ்’, ‘டைகர் ஜிந்தா ஹை’, ‘அட்டரன்க்கி தரெடி’ , ‘ நேனோக்கடைன்’ போன்ற பிரபலமான திரைப்படங்களுக்கு இவர் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். இவருடைய திறமைகளின் தொகுப்பு தனித்துவமான பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. இந்த திரைப்படத்திலும் இவருடைய அதிரடிகள் இடம் பெற்றிருக்கிறது.
கிரேட் மேக்கரே- ‘மேட் மேக்ஸ் : ப்யூரி ரோடு’, ‘அவெஞ்சர்ஸ் :ஏஜ் ஆப் அல்ட்ரான்’ போன்ற படங்களுக்கு ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்தவர். வார்( WAR) போன்ற படங்களில் இவரது பங்களிப்பு பிரமிக்க வைத்தது. அதிரடியான தருணங்களை உருவாக்கும் அவரது திறன் இந்த திரைப்படத்திலும் தொடர்கிறது.
கெச்சா காம்பக்டீ – ‘துப்பாக்கி’, ‘பாகுபலி 2 -தி கன்குளுஷன்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் இவருடைய பங்களிப்பிற்காக அறியப்பட்டவர். கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹாலிவுட் படங்களில் முக்கிய பணிகளை மேற்கொண்ட இவர், 2018 ஆம் ஆண்டில் ‘பாகுபலி 2’ படத்தில் பணியாற்றியதற்காக சிறந்த அதிரடி சண்டை பயிற்சி இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றிருக்கிறார்.
சுனில் ரோட்ரிக்ஸ் – ஆக்சன் காட்சிகளின் உருவாக்கம்… தொழில்நுட்ப வடிவமைப்பு… இயக்கம் மற்றும் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர். ‘ஷெர்ஷா’, ‘சூரியவன்ஷி’, ‘பதான்’ போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் சில அற்புதமான அதிரடி சண்டை காட்சிகளை இயக்கியிருக்கிறார்.
அனல் அரசு- இந்திய சண்டை பயிற்சி இயக்குநர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்படத் துறையில் பணியாற்றி வருகிறார். ‘சுல்தான்’, ‘கத்தி’, ‘கிக்’ ஆகிய படங்களில் சண்டை காட்சிகளை அமைத்து பிரபலமானவர்.
‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் சர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.