ஹரிகிருஷ்ணன், லிஜோ மோல் ஜோஸ், லாஸ்லியா, தாரணி, ராஜீவ் காந்தி, வைரபாலன், சுதீஷ் நடித்துள்ளனர்.ஜோஸ்வா சேதுராமன் இயக்கி உள்ளார்.கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் ட்ராப் ஓஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
நாயகன் ஹரி கிருஷ்ணன் – லிஜோ மோல் ஜோஸ் இருவரும் புதுமணத் தம்பதிகள்.திருமணம் ஆகி மூன்றே மாதங்கள் தான் ஆகியுள்ளன.ஹரிகிருஷ்ணன் எல்ஐசியில் பணியாற்றுகிறார்.லிஜோ மோல் கிராமத்தில் இருந்து வந்திருந்தாலும் படித்த விவரமான பெண்.இருவரும் மனமொத்த தம்பதிகளைப் போல் நெருக்கமாகத்தான் இருக்கிறார்கள்.இவர்கள் வீட்டில்
ஒரு நாள் ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்கிறது .அதற்குப் பிறகு தான் தனது கணவன் அன்பானவன் அல்ல. மிகவும் அயோக்கியன் என்று நாயகிக்குப் புரிகிறது. அதற்குப் பிறகு அதிர்ச்சிகரமான பாதையில் கதை செல்கிறது.அதற்கேற்ற சம்பவங்கள் நடக்கின்றன. முடிவு என்ன என்பதுதான் படத்தின் திரைக்கதை.
ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்திற்குப் பிறகு கதை எப்படி நகரும் என்கிற பதற்றம் நமக்கு வருகிறது. ஆனால் இயக்குநர் மிகவும் புத்திசாலித்தனமாக லாஸ்லியா பாத்திரத்தை உள்ளே கொண்டு வந்து கதையை வேறுதளத்துக்கு இழுத்துச் சென்று நம்மை உட்கார வைக்கிறார்.
கதைக்காக இயக்குநர் பெரிதாக மெனக்கடவில்லை. தினசரி செய்தித்தாள்களில் வரும் சம்பவங்களை எடுத்துக்கொண்டு புத்திசாலித்தனமான திரைக்கதை அமைத்து ஒரு விறுவிறுப்பான படமாக மாற்றி இருக்கிறார்.உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டதாக இருப்பதால் படத்தின் கதை நம் மனதுக்கு நெருக்கமாக நம்பகத்தன்மையுடன் இருக்கிறது.
இவ்வளவுக்கும் பிறகும் கதையைச் சொல்லாமல் இருப்பதன் காரணம் படம் பார்க்கச் செல்வர்களுக்கு அது ஒரு தடையாக இருக்கும் என்கிற விமர்சன தர்மத்திற்காகத்தான்.ஏனென்றால் அப்படிப்பட்ட கதை இது.
இது நடித்துள்ள ஹரிகிருஷ்ணன், லிஜோ மோல் ஜோஸ், லாஸ்லியா என மூன்று பேர் தான் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள்.சொற்ப கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு இந்தப் படத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார் இயக்குநர்.படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் ராஜீவ் காந்தி அவர் குற்ற வழக்கை எதிர் கொள்ளும் போது நடக்கும் உரையாடல்கள் எல்லாம் நல்லதொரு நகைச்சுவைக் காட்சிகளாக உள்ளன. ஆனால் அது காமெடி அல்ல நமது கோணத்தில் பார்க்கும்போது சிரிப்பு வருகிறது. அது மட்டுமல்லாமல் படத்தில் கூர்மையான ,பெண்ணியம் பேசும் வசனங்களும் உண்டு வசனம் யுகபாரதி.
படத்திற்கு ஒளிப்பதிவு கதைப்போக்கில் சென்றுள்ளது.குறைவானலொகேஷன்களை அது மறக்க வைக்கிற அளவிற்கு இருக்கிறது. கோவிந்த் வசந்தா இசை பாடல்களை விட பின்னணியில் பிரமாதமாக இருக்கிறது.
ஜென்டில்வுமன் படம் அனைவரையும் சிந்திக்க வைக்கிற ஒரு படமாக இருக்கும்.
மொத்தத்தில் இந்தப் படம் கள்ளக்காதல் பற்றிச் சொல்கிறது. பெண்ணிய நோக்கில் கதை செல்வதால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் .பரபரப்புடன் இருப்பதால் ஆண்களுக்கும் பிடிக்கும்.