இன்று வரும் பெரும்பாலான படங்கள் வன்முறை அடல்ட் காமெடி ஆங்கில படப் பாதிப்புகள் என்றே உருவாகி வருகின்றன.சமகாலத் தன்மையுடன் ,இந்தக் கால இளைஞர்களின் வாழ்க்கையில்
காதல் அவசரம் கோபம் திடீர் முடிவு என்ற பிரச்சினைகளுக்கு இடையே குழந்தை என்கிற உணர்வை கலந்து உருவாகி உள்ள படம்தான் டாடா.
தாய்மை என்கிற உணர்வைக் காட்ட ஏராளமான படங்கள்வந்துள்ளன. இளம் வயதில் தந்தைமை ஒருவனை எப்படி மாற்றுகிறது என்பதைக் கூறும் படம் தான் இது.
கல்வி,சிந்து கல்லூரிப் பருவத்தினர். காதலர்களான அவர்கள் வாழ்வில் நடந்த அவசரத்தால் சிந்து கர்ப்பமாகிறார் .இதையடுத்து கவின் இளம் வயதில் தந்தையாகிவிடுகிறார்.
இருவரும் நண்பரின் வீட்டில் சேர்ந்து வாழ்கிறார்கள்.பொருளாதார சமூக அழுத்தங்கள் அவர்களை நெருக்கத்திற்கு உள்ளாக்குகிறது.தன் இயலாமையால் கோபம் கோபப்படுகிறார் கவின். இருவர் இடையே பிரச்சினை முற்றி குழந்தையை மருத்துவமனையில் பெற்றுப் போட்டு விட்டு வெளியேறி விடுகிறார் அபர்ணா. பிறந்த குழந்தையைத் தானே வளர்க்கிறார் கவின். அதன் பிறகான முடிவு தான் கதை.
பல பிரச்சினைகளுக்கு இடையே குழந்தையை எப்படி கவின் வளர்க்கிறார் மணிகண்டன் என்பதை மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் கணேஷ் கே. பாபு.
என் மணிகண்டன் ஆகணும் சிந்துவாக அபர்ணாதாசும் நடித்து இருக்கின்றனர். அவர வர் பாத்திரத்திற்கு அவரவர் சரியாக நியாயம் செய்துள்ளார்கள்.
இடையிடையே பல பாத்திரங்கள் வந்து நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.
எதற்கும் அழ மாட்டேன் என்று சொல்லி கவினின் மணிகண்டன் பாத்திரம் அறிமுகம் செய்யப்படுகிறது படத்தில்.பிறகு அவர் கலங்கி நிற்பது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி ஊட்டும் அனுபவம்.
பல இடங்களில் கண்ணீருடன் வரும் அபர்ணா தாஸ் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கவின், அபர்ணா தாஸ் இடையேயான கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க்அவுட் ஆகியுள்ளது.
ஒளிப்பதிவும் , இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன. ஜென் மார்டினின் பின்னணி அருமை.
காட்சிகள் உருவாக்கத்தில் சிக்கனம் பார்க்காமல் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளன.
எமோஷன், காதல், பாசம், காமெடி என சரிவிகித கலவையாகக் கொடுக்கப்பட்ட அழகான படம் டாடா.படம் பார்த்தவர்களுக்கு அந்த கலவை நிச்சயம் திருப்தி தரும்