லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து அண்மையில் வெளியான டான் படத்தின் 25வது நாள் வெற்றி விழாக் கொண்டாட்டம் சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தைத் தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் ஜி. கே. எம். தமிழ்க் குமரன் இணைத் தயாரிப்பாளர் கலையரசு, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சிபிசக்கரவர்த்தி,இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சூரி, படத்தை வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின்,படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியவர்களுக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கப்பட்டன.