டிரம்ஸ் சிவமணி இசையில், தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் வழங்கும், “புரடக்சன் நம்பர் 1”புதுமையான ரொமாண்டிக் க்ரைம் திரில்லர் !
தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் இயக்கும், முரளி ராம், தேவிகா கிருஷ்ணன் நடிப்பில், டிரம்ஸ் சிவமணி இசையில், உருவாகிறது புதுமையான ரொமாண்டிக் க்ரைம் திரில்லர் திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.
அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் புதுமையான திரைக்கதையில் மாறுப்பட்ட ரொமாண்டிக் க்ரைம் திரில்லராக இப்படத்தை உருவாக்குகிறார். உலகப்புகழ்பெற்ற இசை வித்தகர் டிரம்ஸ் சிவமணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கிரமாத்து பின்னணியில், மாறுபட்ட ரொமாண்டிக் க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் புதிய அனுபவமாக இருக்கும்.
இப்படத்தில் நாயகனாக தொப்பி படம் மூலம் அறிமுகமான முரளி ராம் நடிக்கிறார். நாயகியாக தேவிகா கிருஷ்ணன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.
![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2023/02/2-1024x682.jpeg)
![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2023/02/1-1024x682.jpeg)
![](https://tamilcinemareporter.com/wp-content/uploads/2023/02/3-1024x682.jpeg)
இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் ஒரே கட்டமாக நடை பெறவுள்ளது. படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.