
அவனே ஸ்ரீமன் நாராயணா கன்னட படமாக உருவாகியுள்ள இப்படத்தினை தமிழில் டப் செய்து வெளியிடவுள்ளனர் இப்படத்தின் ஊடக சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இயக்குநர் சச்சின் ரவி இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி, ஷ்னவி ஸ்ரீவஸ்தவா முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரைப்படம் இது. இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஹச் கே பிரகாஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் சரண் ராஜ் மற்றும் பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளனர்.
கன்னட படமான இப்படத்தினை தமிழில் டப் செய்து வெளியிடவுள்ளனர் .தமிழ் மற்றும் கன்னட பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியாகவுள்ளது. மெகா அதிரடி படமாக உருவாகியுள்ள இப்படத்தினை 2019 டிசம்பர் 27இல் உலகம் முழுவதும் வெளியிட முடிவு செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் ப்ரோமோஷன் மற்றும் விளம்பர பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.