போலி என்கவுண்ட்டர் என்பதை மையப் படுத்தி உருவாகியுள்ள படம். தங்களை தற்காத்துக் கொள்ள அப்பாவிகளை பலியிட்டு போலி என் கவுண்ட்டர் செய்யும் போலீஸ் பற்றிய கதை.
போலி என்கவுண்டர் குற்றச்சாட்டுக்கு ஆளாகிற ஷக்திக்குப் அதை போலி என்று நிரூபிக்க முயல்கிற சமுத்திரக்கனிக்கும் இடையில் நடக்கும் போர்தான் ‘தற்காப்பு’ மையக்கரு.
என்கவுண்ட்டர் வடிவமைப்புடன் காட்சி தொடங்குவது பரபரப்பு ஆனால் அது ஒத்திகை என்று கூறுகிறார்கள்.
ஷக்தி போலீசாக வருகிறார் அவருக்கு பொருத்தமாகவே இருக்கிறது. அவரது குழுவினராக வரும் சகாக்களும் மிடுக்குடன் இருக்கிறார்கள். இடையில் இரண்டு காதல் ஜோடிகளைக் காட்டி பாட்டு, காட்சிகள் என்று இயக்குநர் கதையை கலகல ஏரியாவுக்கு மாற்றியிருக்கிறாரே அது கதையைத் தடம்புரள வைக்கிறதே என்கிற கவலை வருகிறது. ஆனால் நமக்கு இறுதியில்தான் இயக்குநர் அதற்கான இணைப்பு தருகிறார். அந்த போலி என் கவுண்டரில் அந்த அப்பாவி இளசுகளும் பலியாகின்றன.
படத்தின் நாயகன் ஷக்தி, சமுத்திரக்கனி என்றாலும், மனித உரிமை ஆணைய அதிகாரி
சமுத்திரக்கனி வருகிற காட்சிகளில் பொறி பறக்கிறது. ஆனாலும் அவரது விசாரணயில் வீரியம் போதாது
படம் முழுக்க தெறித்து விழுகிற வசனங்கள் கம்பீரமாக எழுந்து நிற்கின்றனஇயக்குநர் ஆர். பி. ரவிக்குசபாஷ் .
நம் நாட்டு அமைப்பு பற்றியும். குற்றவாளி களுக்கும் அரசியல் வாதிகளுக்குமான குற்றவாளி களுக்கும்போலீசுக்குமான புரிதல் கள்ள உறவு பற்றியும் வரும் காட்சிகள் வசனங்கள் துணிச்சலான சாட்டையடிகள். படம் நல்ல முயற்சி என்பதால் குறைகளை புறக்கணித்து ஆதரிக்கலாம்.
வசனங்களில் பொறி பறந்தாலும் க்ளைமாக்ஸ் அஹிம்சையையும் அன்பையுமே போதித்து நிற்கிறது.