இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் ஸ்ரீ இயக்கும் படம் ‘தீதும் சூதும்’.இப்படத்தைப் பற்றி இயக்குநர் ஸ்ரீ பேசும்போது,
”என் பெயர் ஸ்ரீ. இயக்குநர் ஷங்கர் அவர்களின் உதவி இயக்குநர். “டமால் டுமீல்” என்ற படத்தின் இயக்குநர். இந்த தீதும் சூதும் திரைப்படம் நானும் எனது நண்பர் எஸ். ஆர். ஜெ இருவரும் சேர்ந்து ஜெயந்தி புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருக்கிறோம்.
கதையின் நாயகன் சிவா, நாயகி ஜெஸ்ஸியை உயிருக்கு உயிராய் காதலிக்கிறான். நாயகி தந்தை லாரன்ஸ் சதி திட்டத்தால் இவர்களின் காதல் பிரிகிறது. சிவா காதலியை அடைய கிரிமினல் உமரோடு கைகோர்த்து திட்டம் போடுகிறான். உமர் சிவாவைப் பயன்படுத்தி வேறு திட்டம் போடுவதால் ஜெஸ்ஸி உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இந்த மூன்று பேரும் அறியாத இன்னொரு நபரின் திட்டத்தில் சிக்கிய இவர்கள் தப்பித்தார்களா? பின்னர் நடந்தது என்ன என்பது திரைக்கதை. நாம் தேர்வு செய்யும் காதல் நம் எதிர்காலத்தை எப்படி முடிவு செய்யும் என்பது கதையின் கரு. 

கதையின் நாயகன் சிவாவாக ஸ்ரீ. நாயகி ஜெஸ்ஸியாக அங்கனா ஆர்யா. அப்பா லாரன்ஸ் கதாபாத்திரத்தில் அவினாஷ், உமர் கதாபாத்திரத்தில் ஸ்ரீனிவாசன், கிருபா, பேபி தாக்ஷிகா, கிரி, கவிதா ராதேஷ்யாம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்”.