
தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘நெப்போலியன்’ படத்தை உரிமை வாங்கி ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் தமிழில் ரீமேக் செய்து தயாரிக்கவுள்ளார். தன் ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரித்து வெற்றிப் படமான ‘தர்ம துரை ‘ க்குப் பிறகு வித்தியாசமான நல்லதொரு கதைக்குக் காத்திருந்த சமுத்திரக்கனி ,ஆர்.கே. சுரேஷுக் கு நெப்போலியன் படத்தின் கதை மிகவும் பிடித்துப் போகவே ரீமேக் உரிமையை வாங்கி விட்டார்.
இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார்கள். மேலும் எதிர்பாராத பல முக்கியமான நடிகர்களும் நடிக்கவுள்ளனர். இந்தியிலிருந்து பெரிய நட்சத்திர நடிகர் ஒருவரும் இதில் நடிக்க வருகிறார்.
மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள’நெப்போலியன் ‘பட த்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.