தேனிசை தென்றல் தேவா வெளியிடும் ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” பாடல்!

கானா அரசரின் 50 வருட திரைத்துறை மற்றும் தன் பிறந்த நாளான இன்று ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” எனும் பாடலை வெளியிட்டுள்ளார்.

சென்னை புரொடக்க்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ” காத்து வாக்குல ஒரு காதல் “.
கதையின் நாயகனாக மாஸ் ரவி நடித்து இயக்கி உள்ளார். கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா, மற்றும்
சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த்,
மேனக்சன் மிப்பு மொசக்குட்டி பிரியதர்ஷினி, பிரியங்கா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” எனும் பாடலை சிறப்பாக பாடியும், தன் பிறந்த நாளான இன்று தேனிசை தென்றல் தேவா வெளியிடுள்ளார்
இப்பாடலில் இயக்குநரும் நடிகருமான மாஸ் ரவி, சஞ்சனா சிங், தங்கதுரை, ஆதித்யா கதிர், பவர் ஸ்டார் நடனமாடியுள்ளனர்.

தற்போது இப்படத்தின் லிரிக் வீடியோவை இன்று ( 20.11.2024 ) 5 ஸ்டார் ஆடியோஸ் யூடியுப் தளத்தில் வெளியாகி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.