நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா – இயக்குநர் கோபிசந்த் மலினேனி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் பாலையா..’ எனத்தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் நடசிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா இதுவரை திரையில் தோன்றிராத- மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெய் பாலையா..’ எனத் தொடங்கும் பாடல், அவரது ரசிகர்களுக்கான கீதமாக அமைந்திருக்கிறது. பாடலின் மெட்டு, பாடல் வரிகள், இசை, பின்னணி குரல்… ஆகியவை பாலகிருஷ்ணாவின் புகழை மேலும் ஓங்கி ஒலிக்க செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த பாடலில் அவரது தோற்றம், நடை, நடனம்… என அனைத்தும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.
‘சரஸ்வதி புத்திர’ ராம ஜோகையா சாஸ்திரியின் பாடல் வரிகளும், பாடகர் கரீமுல்லாவின் காந்த குரலும், ‘ஜெய் பாலையா..’ எனும் பாடல், ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது மேலும் இந்தப் பாடல் பாலகிருஷ்ணாவின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து திரையிசை பிரியர்களுக்கும் பிடித்த பாடலாக நீண்ட காலத்திற்கு இசைபாடல்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கும். இந்தப் பாடலை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
நந்தமூரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதி இருக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ராம் – லக்ஷ்மன் இருவரும் இணைந்து சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். மாஸ் என்டர்டெய்னர் ஆக்சன் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். ஏ. எஸ். பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சந்து ரவிபதி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சங்கராந்தி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.