நல்ல திரைப்படங்களின் காதலரான இயக்குநர் தங்கர்பச்சான் தனது அடுத்த படம் பற்றிக் கூறி இருப்பதாவது:
‘ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கே எப்பொழுதும் நான் முனைகின்றேன். இம்முறை சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நடிப்பு கலைஞர்களுடன் இணைந்து ‘கருமேகங்கள் கலைகின்றன’ எனும் திரைப்படத்தை சிதையாமல் உருவாக்கி வருகிறேன். பாதிக்கு மேல் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பாரதிராஜா அவர்களின் உடல்நலம் குன்றியதால் அனைத்து பணிகளும் கடந்த 130 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு பணிகள் இப்பொழுது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.



எண்ணற்ற இடையூறுகளைத் தாண்டி ஒவ்வொரு நாளும் முழுமூச்சுடன் உழைத்துக் கொண்டிருக்கிறோம்! உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளோடு!’இவ்வாறு கூறியிருக்கிறார்.படம் சிறப்பாக அமைந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்!