நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா தமிழில் அறிமுகமாகும் படம் ‘கஸ்டடி’ இப்படத்தை வெங்கட் பிரபு தமிழ், தெலுங்கு மொழிகளில் இயக்கியுள்ளார்.கிருதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார்.பிரியாமணி முக்கியமான வேடமேற்றுள்ளார்.அரவிந்த்சாமி, சரத்குமார் போன்ற நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.’கஸ்டடி’ படத்தின் ஊடக சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அதில் வெங்கட் பிரபு பேசும் போது,
” இது எனது வழக்கமான பாணியில்இருந்து விலகி முற்றிலும் வித்தியாசமான பாணியில் இயக்கி உள்ள படம். இதில் என்னிடம் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்கள் இருக்கும் .அதே வேளை புதிய அம்சங்களும் இருக்கும் .ஒரே பாணியில் இருக்கக் கூடாது என்கிற ஒரு சவாலாக இதை எடுத்துள்ளோம்.இப்படத்திற்கு வழக்கமாக எனது சகோதரர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் என்றாலும், பெரியப்பாவிடம் இசையமைக்குமாறு கேட்டுக் கொண்டோம். அவர் ஒப்புக்கொண்டதும் எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. கதை என்று ஒன்று புதிதாக இல்லை. ஆனால் புதிய முறையில் கூறி இருக்கிறோம்.கஸ்டடி படத்தை அதன் தயாரிப்பாளர்கள் நான் எதிர்பார்த்ததை விட ஏராளமாக தாராளமாகச் செலவு செய்து படத்தைப் பிரமாண்டமான படமாக மாற்றி இருக்கிறார்கள் .” என்றார்.
நடிகர் நாக சைதன்யா பேசும்போது,
” எனக்கு சென்னையும் சென்னை மக்களும் புதிதல்ல. நான் இங்கு படித்து வளர்ந்தவன். என்னிடம் வெங்கட் பிரபு சார் ஆரம்பத்தில் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. செய்யலாம் என்று கூறினேன். அவர் படத்தில் தமிழில் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. எனது அப்பாவின் படங்களுக்கு இசையமைத்து பெரிய வெற்றிகளைக் கொடுத்த இளையராஜா சார் என் படத்திற்கும் இசையமைத்தது எனக்கு பெரிதும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்