
இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் இரண்டு மாதங்கள் சிங்கப்பூரில் நடந்தது. சென்னை விமான நிலையத்தில் நடந்த ஒருநாள் படப்பிடிப்புடன் நாசர் முன்னிலையில் பூசணிக்காய் உடைத்து படக்குழுவினர் படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.
சிங்கப்பூரை களமாகக் கொண்டு முழுநீள நகைச்சுவைக் காதல் படமாக பெரும் பொருட்செலவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள் ளது. நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதீன் பாஷா நாயகனாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.
சதீஷ், கருணாகரன், ஆர். ஜே. பாலாஜி, மனோபாலா மற்றும் ஞானசம்பந்தன் ஆகிய முன்னணி நகைச்சுவை நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.
படத்தின் இன்னொரு கதாநாயகியாக சீன மக்களிடையே பெரும் புகழ் பெற்ற ஸ்டார் நடிகையான நரேல் கெங் நடிக்கிறார். இவர்களைத் தவிர சிங்கப்பூரின் பிரபல சண்டைப் பயிற்சியாளர் சன்னி பாங் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஜோஷ்வா ஸ்ரீதர் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். அனைத்துப் பாடல்களும் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளன. சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
‘பறந்து செல்ல வா’ படத்தின் முதல் தோற்றம் (FIRST LOOK) தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடப்படும்.
