திரைவிழாக்களின் முகங்கள் இப்போது மாறி விட்டன. திரைவிழாக்களை நோக்கி பார்வையாளர்களை ஈர்த்த காலம் மாறி இப்போது பார்வையாளர்களைநோக்கி திரைவிழாக்கள் வரஆரம்பித்துள்ளது பெரிய மாற்றம். பொதுமக்கள் கூடும் வீதிகள்,சந்தை தெருக்கள், வணிக வளாகங்கள், மால்கள் என்று விழாக்கள் நடக்க ஆரம்பித்து விட்டன.
‘கோ2’ படத்தின் இசை விழா இப்படித்தான் வடபழனி போரம் மாலில் சுற்றிலும் மாடிகளிலும் பால்கனிகளிலும் பார்வையாளர்கள் புடை சூழ நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜோன்ஸ் படத்தின் பாடல்களைப் பாடினார். இந்த நேரலை நிகழ்வு பார்வையாளர்களைக் கவர்ந்தது. அவர்களையும் தங்களை பங்கு தாரர்களாக உணர வைத்தது.
பிக் எப் எம் இந் நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. விழாவில் படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் ஒளிபரப்பப் பட்டன. நிகழ்ச்சியில் பாபி சிம்ஹா பேசும்போது ” நான் இதில் பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன். ” என்றார். ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது ” கதாநாயனாக நடிப்பதைவிட கதைநாயனாக நடிக்கவே எனக்கு விருப்பம். நெகடிவ் ரோல்களில் செய்யும் போது ,நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. அது விளையாட பெரிய மைதானம். ஆனால் நல்லவனாக நடித்தால் அது குறுகிய வட்டம். சிறிய அளவில்தான் நடிக்க முடியும். நான் என்றைக்கும் கதாநாயகன் என்று கருதியதில்லை கதை நாயகன் மட்டுமே.. வாழ்க்கையில் நான் பல பள்ளம் மேடுகளைக் கடந்தே வந்திருக்கிறேன். பள்ளம் இல்லாமல் மேடு இல்லை”
என்றார்.நாயகி நிக்கி கல்ராணி கலந்து கொண்டதுடன் நடன இயக்குநர் சதீஷீடன் நடனமும் ஆடினார். மேலும் எப்.எம். பாலாஜியும் நடிகர் பாலசரவணணும் கலந்து கொண்டு பேசினர். பிக் எப் எம் மிருதுளா தொகுத்து வழங்கினார்.