
நாயகியாக மீனலோஷினி அறிமுகமாகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ப் பெண். அந்த மாவட்ட கதைக்களம்..அதற்கேற்ற தமிழ் பேசத் தெரிந்த நாயகி. அந்த வட்டார பழக்க வழங்கங்களை அறிந்தவர் என்பதால் அவரை நாயகியாக அறிமுகப் படுத்தினோம் என்கிறார் இயக்குநர். மற்றும் கராத்தே கோபாலன், வீரன்செல்வராசு, எம்.ஜி.சிவகுமார், மெய்ராஜன், ஜவஹர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – மகேஷ்.K.தேவ் , இசை – S.தர்மபிரகாஷ்
பாடல்கள் – யுகபாரதி, சினேகன், வீரன்செல்வராசு , எடிட்டிங் – A.K.நாகராஜ்

படத்தை பற்றி இயக்குநரிடம் கேட்டோம்..
நாகரிகம் என்ற நச்சு இன்று நகரத்திலிருந்து நகர்ந்து கிராமப்புறங்களையும் தாக்கி கொண்டிருகிறது. இந்த கால கட்டத்திலும் உயிர்ப்புடன் இருப்பது குடும்ப உறவுகளை தாங்கி நிற்கிற கிராமப்புறங்கள் தான். கிராமப்புற மக்களின் உறவுகள், அதில் உள்ள சிக்கல்கள், ஆசை, அன்பு, கோபம் போன்றவையை காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்து உருவாக்கி உள்ளோம். படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை படத்தின் தலைப்புக்கேற்ப ஆக்ஷன் படமாக உருவாக்கி உள்ளோம்.
படத்தின் படப்பிடிப்பு மதுரை, உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது.”
