“என்னோட பையன் 8-வது படிக்கிற வரைக்கும் நல்லா தான் படிச்சிட்டு இருந்தான். ஆனா, 9-வது போனதுல இருந்து மார்க் கம்மி ஆயிடுச்சி. என்ன பண்றதுன்னே தெரியல.” என்பது பல பெற்றோர்களின் மனக்குறை. அதுபோலவே, “என்னோட பையன் +1,+2 போனதுல இருந்து சொல்ற பேச்சே கேக்க மாட்டேன்றான். பிரெண்ட்ஸ் கூட சுத்திட்டு லேட்டாதான் வீட்டுக்கு வரான். படிக்கிறதே இல்ல… எதாச்சும் கேட்டா ரொம்பக் கோவப்படுறான். எவ்வளோ சொன்னாலும் கேக்கறதே இல்ல…” என்பதைப் போன்ற பகிர்தல்களைப் பெற்றோர்கள் கூடுமிடத்தில் பரவலாக நாம் கேட்கமுடியும். இளம் பருவத்திலுள்ள பெண் குழந்தைகள் சார்ந்தும் இதே போன்ற மனக்குறைகள் தான் வேறு வார்த்தைகளில் வெளிப்படும்.
நாம் பெரும்பாலும் பெற்றோர்களின் இடத்திலிருந்துதான் யோசிக்கிறோமே தவிர டீனேஜ் சிறுவர்களின் மன நிலையிலிருந்து யோசிப்பதே இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பிருந்த கல்வி முறையிலிருந்து, தற்போதைய கல்விச் சூழல் முற்றிலும் வேறானது. குழந்தைகள் எல்லாவற்றையும் கிரகிக்க வேண்டும். எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் கவனம் பிசகினாலும் ஆயிரம் கேள்விகள்: “ஏன் மார்க் கம்மி ஆயிடுச்சி? நல்லா தானே படிச்சிட்டு இருந்த? டைம் வேஸ்ட் பண்ற… உனக்கு இப்போ என்ன ஆச்சி? இந்த ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டா காலம் பூரா சந்தோஷமா இருக்கலாம்.”
பள்ளிச் சூழலும், குடும்பச் சூழலும் இதுபோல எழுப்பக் கூடிய பல நூறு கேள்விகளுக்கு மத்தியில் மாணவர்கள் குழப்பத்துடன் திண்டாடுகிறார்கள். இந்த மனக் குழப்பம் இளம் பருவச் சிறுவர்களை மேலும் மேலும் நெருக்குகிறது. மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாகிறார்கள். ஆகவே, அவர்களிடமிருந்து எரிச்சலும் கோபமும் தான் அளவுக்கு அதிகமாக வெளிப்படுகிறது. கூடுமான வரையில் பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் ஒதுங்கி நிற்கத் துவங்குகிறார்கள். இந்த இடத்தில் குழந்தைகளைச் சரியாக அணுகத் துவங்கினால் பிரச்சனையே இல்லை. அதற்கான வழிமுறைகளைத் தான் “மைன்ட் ஃப்ரஷ்” ஏற்படுத்தித் தருகிறது. உளவியல் தன்மையில் சிறுவர்களை அணுகி, அவர்களது கவனச் சிதறல்களை மட்டுப்படுத்தி, மகிழ்ச்சியுடன் படிப்பின் மீதான கவனத்தைக் குவியச் செய்யும் வாழ்வியல் பயிற்சி முறைகளை பயிலரங்கம் (Workshop) மூலம் மாணவர்களுக்கு வழங்குகிறார்கள்.
கடந்த வாரம் “சென்னை IITM Reseach Parrk ”கில் ஏற்பாடாகியிருந்த “மைன்ட் ஃப்ரெஷ் Flying Elephants” பயிலரங்கில் பல்வேறு தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டார்கள். அதில் பங்குபெற்ற சிலரது பகிர்தல்கள்:
“என்னுடைய ஒரு நண்பன் போன flying elephants workshop” ல கலந்துகிட்டான். அவன் அதுக்கப்புறமா வாங்கின மார்க்ஸ் பார்த்தும் அவனோட மாறிய attitude என்னை இங்க வர வைத்தது. அதனால வொர்க் ஷாப்ல கலந்துக்கிட்டேன். எல்லா சப்ஜெக்ட்டையும் ரொம்ப ஈசியா அப்ரோச் பண்றதுக்கு அவங்க கத்துக்கொடுக்குற டெக்னிக் ரொம்ப உபயோகமா இருக்குது.” என்கிறார் பத்தாவது படிக்கும் ஆதித்யா என்கிற மாணவர்.
“எனக்கு இந்த வொர்க் ஷாப் போறதுக்கு மொதல்ல விருப்பமே இல்ல. ஆனா, பிளஸ் 1 படிக்கிறதால ஸ்கூல் கட் அடிக்க ஒரு வாய்ப்புன்னு தான் போயிருந்தேன். கீர்த்தன்யா கத்துக்கொடுத்த “Mind Mapping & Time Management” செம ஜாலியான கான்செப்ட்.சப்ஜெக்ட்ஸ் எல்லாத்தையும் மெமரி பண்ணாம, லாஜிக்கோட படிக்க முடியுது.” – என்கிறார் +1 படிக்கும் பிரிதிவ்.
“நான் மொதல்லையே நல்லா படிப்பேன். அதுல எனக்கு ப்ராப்ளம் இருந்தது இல்ல. ஆனா, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை மூட்டி விடுவேன். அம்மா திட்டிட்டாங்கன்னு அப்பாக்கிட்ட சொன்னா, அப்பா ரொம்பவும் கோவப்படுவாரு. அதனால அம்மாவும் ரொம்பக் கோவப்படுவாங்க. கீர்த்தன்யா Emotional management & Focus பத்தி சொல்லும்போது இந்த நெகடிவ் குவாலிட்டிய கண்டுபிடிச்சி சொன்னாங்க. இப்போ அந்த மாதிரியெல்லாம் சண்டை மூட்டி விடுறது இல்ல. அம்மாவுக்கும் எனக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்துடுச்சி.” என்கிறார் 9-வது படிக்கும் தேவேந்திரன்.
கீர்த்தனாவின் அம்மா சித்ராவுடன் பேசும்பொழுது “என் பொண்ணு ஸ்கூல்ல சந்திச்ச சில பிரச்சனைகளால ஸ்கூல்லுக்கே போக மாட்டேன் என்று மூன்று மாதமாக போராட்டம் பண்ணிக்கிட்டு இருந்தா. நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். டாக்டர் கிட்டே கூட கூட்டிப் போனோம். ஆனால் ஒன்னும் முன்னேற்றம் இல்லை. அப்புறமா இந்த workshop கேள்விப்பட்டு இங்கே ஒரு counselling மற்றும் இந்த மூன்று நாள்ல வந்த மாறுதல்ல ஸ்கூல்ல பர்ஸ்ட் வந்து காமிக்கிறேன் என்று சவால் விட்டு இருக்கா. கேட்கவே சந்தோஷமா இருக்கு. எங்களையும் கீர்த்தன்யா பேரன்டிங் வொர்க் ஷாப்புக்குக் கூப்பிட்டு இருந்தாங்க. அதுல எங்கிட்டயும் கொஞ்சம் தப்பு இருக்கறது சொன்னாங்க. நானும் என்னோட அப்ரோச்ச கொஞ்சம் மாத்திக்கிறேன்.” என்று பகிர்ந்து கொண்டார்கள்.
“பெரும்பாலும் கொழந்தைங்கக் கிட்ட பிரச்சனையே இருக்கறது இல்ல. அப்படியே ஒருசில குறைகள் இருந்தாலும், அதெல்லாம் ரொம்ப சின்னச் சின்னக் குறைகள் தான். ரொம்ப சுலபமா அதையெல்லாம் அவங்க கடந்து வந்துடுவாங்க. அவங்களுக்கு நல்லதொரு சூழல் அமைந்தால் அந்தக் குறைகள் கூடக் காணமல் போய்விடும். ‘சிறுவர்கள் – ஆசிரியர்கள் – பெற்றோர்கள்’ – இவர்களை ஒன்றிணைத்துப் பரஸ்பரப் புரிதலை ஏற்படுத்தினாலே மாணவர்கள் படிப்பில் மட்டுமல்ல, குடும்ப உறவுகள் சார்ந்தும் அன்பானவர்களாக இருப்பார்கள். அதனால தான் Emotional Management பத்தி அவங்கக்கிட்ட நெறையவே பேசுறேன். அதன்பிறகு Time Management, Goal Setting & Focus போன்றவற்றை யதார்த்தமாக அவர்களிடம் பேசுகிறேன். நம்ம வெகு இயல்பாகக் குழந்தைகளிடம் பேசினால், குழந்தைகள் நம்மிடம் நிறைய பகிர்ந்து கொள்கிறார்கள். Sharing இருக்கும் உறவுகளில் பிரச்சனைகள் இருப்பதில்லை. அதனைப் பெற்றவர்களுக்குப் புரிய வைக்கத்தான் நான் எப்பொழுதுமே விரும்புகிறேன். இது பள்ளிச் சிறுவர்களுக்கு மட்டுமல்ல, கல்லூரி செல்லும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் பொருந்தும்.” என்கிறார் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி.
இவர்களின் அடுத்த பயிற்சி இப்போது அமபத்தூரில் நடந்து கொண்டு இருக்கின்றது. தேதி: 29 முதல் 31 டிசம்பர் 2014. இடம் : AIEMA Technical Center, ATC ரோடு, அம்பத்தூர் Industrial Estate.