தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக 03.01.2018 அன்று மாலை கலைவாணா் அரங்கில் நடந்தது.
இந்த விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களுடன் பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. டாக்டா் கலைஞா் அவா்களுக்கான விருதை முன்னாள் துணை சபாநாயகா் வி.பி.துரைசாமி பெற்றுக் கொண்டார். பி.எஸ்.சரோஜா, சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, கீதாஞ்சலி, ஷீலா, ரேவதி, பவானி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, பேபி இந்திரா, வெண்ணிறாடை நிர்மலா, எல்.விஜயலட்சுமி, ரோஜாரமணி, ஜெயா, லதா, பி.ஆா்.வரலட்சுமி, ஒய்.விஜயா, சுசிலா மா.லட்சுமணன், குட்டி லட்சுமி, எம்.என்.ராஜம், குலசகுமாரி, ராஜஸ்ரீ, வைஜெயந்தி மாலா, பி.எஸ்.சீதாலட்சுமி, ஜமுனா, அமிர்தம், கவிஞா் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், ஸ்டில்ஸ் சங்கா்ராவ், ஆரூா்தாஸ், சொர்ணம், காஸ்டியுமா் முத்து, எடிட்டா் எம்.ஜி.பாலுராவ், ஏவிஎம். ஆா்.ஆா்.சம்பத் ஆகியோருக்கு பதக்கம் அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆா். பல்கலை கழகத்தின் வேந்தா் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடிகா் சங்க செயலாளரும், தயாரிப்பாளா் சங்க தலைவருமான விஷால் முன்னிலையில் புரட்சிக் கலைஞா் விஜயகாந்த் மக்கள் திலகம் எம்.ஜி.ஆா். அவா்களின் திருஉருவசிலையை திறந்து வைத்தார்.
விழாவில் கலந்து கொண்டவா்கள் :- தயாரிப்பாளா் சங்க தலைவரும், நடிகா் சங்க செயலாளருமான விஷால், பெப்ஸி தலைவா் ஆா்.கே.செல்வமணி தமிழ்நாடு திரைப்பட இயக்குந சங்க தலைவா் விக்கிரமன், பிலிம் சேம்பா் தலைவா் ஆனந்தா எல்.சுரேஷ், தமிழ்த் திரைப்பட வா்த்தக சபை தலைவா் அபிராமி ராமநாதன், கில்டு செயலாளா் ஜாக்குவார் தங்கம், டிஜிட்டல் பிலிம் அசோசியேஷன் தலைவா் கலைப்புலி ஜி.சேகரன், விநியோகஸ்தா் சங்க தலைவா் டி.ஏ.அருள்பதி, விநியோகஸ்தா் சங்க கூட்டமைப்பு தலைவா் செல்வின்ராஜ், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளா் சங்க செயலாளா் ஆா்.பன்னீா்செல்வம், தயாரிப்பாளா் எஸ்.தாணு, நடிகா் சத்யராஜ், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பி.வாசு, பாண்டியராஜன், ஆா்.பார்த்திபன், நடிகா் விஜயகுமார், எஸ்.வி.சேகா், விக்ரம்பிரபு, டி.பி.கஜேந்திரன், ஆா்.வி.உதயகுமார், கே.ராஜன், இயக்குனா் பேரரசு, நடிகை அம்பிகா, தயாரிப்பாளா் ஹேமா ருக்மணி, சித்ரா லட்சுமணன், சிவஸ்ரீ சீனிவாசன், சிவஸ்ரீ சிவா, நடன இயக்குந சுந்தரம், ருக்மாங்கதன் மற்றும் பலா் கலந்து கொண்டனா். விழாவில் டாக்டா் சங்கா் கணேஷ் இன்னிசைக் கச்சேரி நடந்தது. எம்.ஜி.ஆரின் பாடல்கள் மட்டும் பாடப்பட்டது.
விழாவிற்கு வந்தவா்களை தலைவா் டைமண்ட்பாபு, செயலாளா் பெருதுளசி பழனிவேல் தலைமையில் அனைத்து பி.ஆா்ஓக்களும் வரவேற்றார்கள்