
நோய் நொடி இல்லாமல் வளர்க”… சந்தோஷம் பொங்க பாடிய பழம் பெரும் திரைப்பட பின்னணி பாடகி “சரளா அம்மா” அவர்கள் மற்றும் அவர்களுடைய இரண்டு பெண்கள் ஆதரவின்றி அன்றாட வாழ்வதற்கே திண்டாடி வருகிறார் என்ற செய்தியை பத்திரிக்கை வாயிலாக அறிந்த விஷால் உடனே அவர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு நான் இருக்கிறேன் என்று கூறி அவர்களுக்கு மாதம் தோறும் தனது தேவி அறகட்டளை மூலமாக ரூபாய் 5,000. (ஐந்து ஆயிரம்) தருவதாகவும் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்து தருவதாகவும் அறிவித்து உள்ளார்.
