“ ஒரு கிராஃப் மேல போய்ட்டே இருந்தால் தான் அழகு. அது போல நம்ம வளர்சிக்கேற்ப நம்ம உழைப்பும் வளரந்தால் தான் நல்லா இருக்கும்” ஒரு பென்சில் கையில் சுழல, ஆரம்பித்தார் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார்.
தமிழ் சினிமாவின் ‘டார்லிங்’ ஜி.வி. பிரகாஷ் தனது அடுத்த ரிலீஸ் ‘பென்சில்’ படத்திற்காக எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார் என்று நம்மால் யூகிக்க முடிகிறது.
“ நடிப்பிற்காக எனக்குள் இருக்கும் சிறு சிறு கூச்சங்களைக் கைவிட நேர்ந்தது.” என்கிறவர்,
நடிகனென்று மாறியாச்சு பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு என்று பாடாத குறையாக உற்சாகத்துள்ளலுடன் உள்ளார்.
”அது ஒரு இமாலய சவாலாய் இருந்தது. தொடக்கம் முதலே ஒரு பயம் கலந்த சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ‘டார்லிங்’ படம் மூலம் மக்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அடுத்து ‘பென்சில்’ வெளி வரத் தயாராக உள்ளது’
“ தற்பொழுது cameo films சார்பில் ஜெயகுமார் தயாரிக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இயக்குநர் ஆதிக் எதை எப்போ செய்வாரென்றே தெரியாது. அவர் இந்த படத்தின் டைட்டில் சொல்லும்போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இப்படத்தில் எனது கதா பாத்திரம் மிகவும் பேசப்படும்.. எளிதில் இந்த கதா பாத்திரம் அனைவரையும் கவரும். இப்படம் அதன் கதைக்காகவும் , அதன் பாத்திரங்களுக்காகவும் பேசப்படும். இந்த படத்தின் படப்பிடிப்பு தளமே மிகவும் உற்சாகமானது. அந்த உற்சாகம் படம் முழுக்க நிறைந்து இருக்கும். .விரைவில் இசையுடன் ‘கம்மிங் ஆன் தி வே டி செல்லக் குட்டீஸ்” என்று தனது மென்மையான சிரிப்புடன் விடைபெற்றார்.