‘பாயும்புலி’ விமர்சனம்

pp1ஆள்கடத்தி பணம் பறிக்கும் அநியாகக் கும்பலுக்கும் அவர்களை வேரறுக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் மோதல்தான் கதை.

இதுவே ஒருகட்டத்தில் இருதுருவங்களாக மாறிய அண்ணன் தம்பியின் கதையாகவும் பரிணமிக்கிறது.

மொமொட போலீஸ் உடை மிடுக்கு விஷாலுக்கு நன்றாகவே பொருந்துகிறது. அரசியல் ஆசையில் அலையும் அண்ணன் சமூத்திரக்கனியே போகப்போக விரோதியாக உருவெடுப்பது சுவாரஸ்யம். க்ளைமாக்சில் அண்ணனையே கடமையே பெரிது என்று துவம்சம் செய்து காக்கிசட்டையின் கௌரவம் காக்கிறார் விஷால்.

இடையில் சாலையைக் கடக்கவே அஞ்சும்  கவிதையான காஜல் அகர்வாலைக் காதலிக்கிறார்.

படத்தில் விஷால், சமுத்திரக்கனி இருவரும் ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனை நடிப்பையும் கொடுத்திருக்கிறார்கள்.  சமுத்திரக்கனியின் பாத்திரத்தை மறைத்து வைத்ததால் படத்தில் அவரைப் பார்க்கும் போது புதிதாகத் தோன்றுகிறது.

பயந்தாங்கொள்ளி என்கிற பாத்திரச் சித்தரிப்பில் காஜல்அகர்வால் கலகலப்பூட்டுகிறார். குடிகார சூரி மோசமான மனைவியிடம் படும்பாடு சரியான காமெடி சரவெடி.

ஜெயப்பிரகாஷ், ஆனந்தராஜ், மனோஜ்குமார், ஹரீஷ், வேல.ராமமூர்த்தி என பலரையும் பயன்படுத்தி பதியவும் வைத்துள்ளார் சுசீந்திரன்.

வைரமுத்து இமான் கூட்டணியில் 4 பாடல்களும் வணிக மயம். வேல் ராஜின் ஒளிப்பதிவு வண்ணமயம்.ஆயிரம் இருந்தும் சுசீந்திரனது முத்திரை இல்லாதது ஒரு குறையாக உணரவைக்கிறது.