பார்த்திபன் கொஞ்சம் யோசிக்கக் கூடியவர்தான். சிலநேரம் மட்டுமே அதை ரசிக்க முடியும். பலநேரம் அவர் புதுமை என்கிற பெயரில் செய்வது, பேசுவது அசட்டுத்தனமாக இருக்கும். அப்படித்தான் “குரங்கு பொம்மை” விழாவில் பாரதிராஜாவைக் குரங்கு என்று கூறியதும்.
ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி இருக்கும் “குரங்கு பொம்மை” படத்தில் பாடல்கள் வெளியீடு நேற்று நடைபெற்றது. பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் இயக்குநர் மனோபாலா, நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குநர் தரணி, நடிகர் சிபிராஜ், நடிகர் விதார்த், தயாரிப்பாளர், நடிகர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் மைம்கோபி, டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
குரங்கு பொம்மை, பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய,பார்த்திபன் வித்தியாசமாகப் பாராட்டுவதாக எண்ணி அசட்டுத்தனத்தை வெளிப்படுத்தினார்..
விழாவில் பார்த்திபன் பேசுகையில், ” இயக்குநர் இமயம், பாரதிராஜா அவர்களை பாராட்டுவதற்கு வாழ்நாள் போதாது. தமிழ்ச்சினிமா ஒட்டுமொத்தமாக பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பெரிய பாராட்டுவிழா எடுக்கவேண்டும். இந்த படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. எனவே இயக்குநர் இமயம் அவர்களை வித்தியாசமாக பாராட்ட ஆசைப்படுகிறேன்.
பாரதிராஜா நல்ல இயக்குநர்னு எல்லாரும் சொல்வாங்க. பாரதிராஜா சிறந்த மனிதர்னு சொல்வாங்க. ஆனா, நான் என்ன சொல்றேன்னா பாரதிராஜா ஒரு சிறந்த “குரங்கு”. குரங்கு நான்கு எழுத்து.
கு / நல்ல குணவான்
ர / சிறந்த ரசனையாளர்
ங் / இங்கிதம் தெரிந்தவர்
கு / குவாலிட்டியானவர்
இதுதான் அந்த குரங்குக்கு அர்த்தம் “என்று பேசினார்.என்னே ஒரு அசட்டுத்தனமான கற்பனை!
ஐயோ… ஐயோ …!