நூறு கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் மணிரத்னம் அவர்களை, லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M செண்பகமூர்த்தி ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். Madras Talkies Executive Producer சிவா ஆனந்த் இந்த நிகழ்வின் போது உடனிருந்தார்.
