புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. அறிமுக இயக்குநர் துரை முருகன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் திலீபன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தீப்தி மானே நடித்திருக்கிறார் .இவர்களுடன் ஜே கே சஞ்சீத் ,உஜ்ஜைனி ராய், கானா பாலா ,பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.




ஜி. சிவராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. சசிதரன் இசை யமைத்திருக்கிறார் .படத்தொகுப்பு பணிகளை பாலா கவனிக்க இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் மறைந்த புலவர் புலமைப்பித்தன் ,விவேகா, கானா பாலா, ஏகா ,ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். ஏப்ரல் ஏழாம் தேதியான இன்று படம் திரையரங்கில் வெளியானது…மக்களுடன் மக்களாக நடிகர் திலீபன் புகழேந்தி ஆல்பட் தியேட்டரில் படம் பார்த்தார்.