
‘ உறவுகளும் உணர்வுகளும் எவ்வளவு முக்கியமான இடத்தை மனித வாழ்வில் இடம் பிடிக்கிறதோ, அதே அளவுக்கு ஊடலும் கூடலும் இடம் பெறுகிறது. பிரிவைத் தொடர்ந்து வரும் இணைதல் மனிதன் உறவுகளின் பயணத்தில் முக்கியமானது.. இத்தகைய நுணுக்கமான மனித உணர்வுகளை பிரதிபலிப்பதற்கு சிறந்த நடிகர்கள் தேவை. அந்த வகையில் ஜீவா தான் இந்த கதாப் பாத்திரத்துக்கு மிக மிக பொருத்தமானவர்.அவர் கதைக்கு ஏற்ப, பாத்திரத்துக்கு ஏற்ற நுண்ணிய உணர்வுகளை பிரதிபலிப்பவர். வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்ட வேண்டும் என்று எப்போதும் விழையும் அவருக்கு ‘கவலை வேண்டாம்’ படத்தின் கதாப் பாத்திரம் மிக பொருத்தமானது. காஜல் அகர்வால் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க உளார். அவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் தடவை. பாபி சிம்ஹா தற்போது எங்களது தயாரிப்பில் ‘கோ 2′ என்ற படத்தில் நடித்து வருகிறார்.\கவலை வேண்டாம்’ படம் மூலம் நாங்கள் மீண்டும் இணைந்துப் பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி. இயக்குநர் டிகே ‘யாமிருக்க பயமே’ படம் மூலம் எங்களது நிறுவனம் மூலம் அறிமுகம் ஆனவர். அதில் எங்களுக்கு மிகுந்த பெருமை. அதை தொடர்ந்து டிகே தனது அடுத்த படமான ‘கவலை வேண்டாம்’ படத்தையும் எங்கள் நிறுவனத்துக்கே செய்வதில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. திறமைகளின் சங்கமமாக இருக்கும் ‘கவலை வேண்டாம் ‘ திரைப் பட வர்த்தகர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்.