உலகம் முழுக்க தூக்குத் தண்டனைக்கு எதிரான நாளாக 10/10 என்ற இந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில் தூக்குத் தண்டனையை மனித நேய மீறல் என்று சொல்லும் திரைக்கதையோடு WEC பிலிம் பேக்டரி நிறுவனம் ‘ஆதியோகி சிங்கை எம்.ரவி’ என்ற பெயரில் படம் ஒன்றை தயாரிக்கிறது.
உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராகப் போராடும் சர்வதேச மனித உரிமை வழக்கறிஞர் சிங்கப்பூர் தமிழரான ஆதியோகி சிங்கை எம்.ரவி என்பவர்.
இவர் எழுதிய கம்பாங் பாய் (KAMPONG BOY) மற்றும் ஹங் அட் டான் (HUNG AT DON) என்கிற புத்தகங்களின் உண்மையைத் தழுவி இந்த படம் உருவாகிறது.
இன்னும் சொல்லப்போனால் மனித மகத்துவம், நீதியை நிலைநாட்டிய தமிழ் கலாச்சார பாரம்பரியம், நல்லொழுக்க வாழ்க்கை முறை, பண்டைய தமிழ் மன்னர்கள் மக்களின் நலனுக்காக நீதியுடன் ஆட்சி புரிந்தது ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகிறது.
அதுமட்டுமல்ல இந்த படத்தில் உலகெங்கிலும் மரண தண்டனைக்கு எதிராகப் போராடும் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக ஆதியோகி சிங்கை எம்.ரவி நடிக்கிறார்.
மேலும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் பிரேம் லி இந்தப் படத்தை இயக்குகிறார்.

விரைவில் சென்னையில் இதன் படப்பிடிப்பு துவங்கி சிங்கப்பூர், மலேசியா, நைஜீரியா மற்றும் ஜெனிவா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

இயக்குநரும் தயாரிப்பாளருமான பிரேம் லி கூறும்போது,
“10-10-2021 உலக மரண தண்டனைக்கு எதிரான நாளான இன்று இந்த படத்தின் அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
சத்தியத்தின் அடிப்படையிலான உண்மையை இப்படைப்பு பேசும். இதன் மூலம் மரண தண்டனையைப் பற்றிய அபிப்ராயங்களை சமூகம் புரிந்துகொள்ளும்” என்று கூறினார்.