நாளை ‘பறந்து செல்ல வா’ திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் நடிகர் , தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசரின் மகன் லுத்புதீன் பாஷா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜஷ் , நரேல் கேன் ஆகியோர் நடித்துள்ளனர். இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் நாசரின் மகனான லுத்புதீன்பாஷாவின் நடிப்பை அனைவரும் பெரிய அளவில் பாராட்டி உள்ளனர். மிக முக்கியமாக தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் பாஷாவின் நடிப்பை சென்ற வாரம் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் புகழ்ந்து பேசினார்.
எல்லோரும் பாராட்டும் அளவுக்கு பாஷாவின் நடிப்பு பேசப்பட காரணம் அவர் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து அவருடைய தந்தையிடம் கூறியவுடன் பாஷாவை அவருடை தந்தை நடிப்பு பயிற்சி வகுப்புக்கு அனுப்பி நடிப்பைக் கற்று வரச் சொன்னார். இதன் மூலம் நடிப்பை ஆர்வமாகக் கற்று கொண்ட பாஷா தற்போது வெளியாகவுள்ள “ பறந்து செல்ல வா “ திரைப்படத்தில் சம்பத் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார். எல்லோரிடமும் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இத்திரைப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
பறந்து செல்லவா திரைப்படம் 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்த ஓர் அனுபவத்தை தரும் என்கிற லூத்புதின் பாஷாபடம் பற்றுக்கூறும் போது,
“பறந்து செல்ல வா “ திரைப்படத்தில் நடித்து உள்ளேன். முதல் முறையாக இதில் கதாநாயகனாக நடித்துள்ளேன். இப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். கதாநாயகனாக நடிப்பதால் மட்டுமல்ல இப்படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல்கேங் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நகைச்சுவை நடிகர்களாக சதிஷ், கருணாகரன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் காட்சிகள் அனைத்தும் சிங்கப்பூரில் படமாக்க பட்டுள்ளன. இதுவரை சிங்கப்பூரை அனைவரும் படமாக்கியது போல் படமாக்காமல் முற்றிலும் புதிய விதத்தில் உருவாக்கியுள்ளோம். இப்படம் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்தது போல் ஒரு நல்ல அனுபவத்தை தரும்.
சைவம் திரைப்படத்தை முடித்துவிட்டு நான் கதைகளைக் கேட்டுகொண்டிருந்தேன். அப்போது இயக்குநர் தனபால் பறந்து செல்ல வா கதையை கொடுத்து இந்த கதையில் நீங்க நடிக்க வேண்டும் என்றார். இப்படத்தில் சம்பத் என்ற முக்கிய கதாபாத்திரம் உள்ளது அதில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்றார். கதையை முழுவதும் படித்தேன் கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது , எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு மார்டன் பெண்ணாக நடித்து இருக்கின்றார். அவர் படப்பிடிப்பு தளத்தில் என்னுடன் நட்போடு இருந்தார். எனக்கு சில இடங்களில் தடுமாறும் போது சொல்லி கொடுத்தார். இந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. அதை நான் அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அப்பா என்னிடம் “ நீ ஒரு நடிகன் , கதாநாயகன் என்பதனை மறந்து மிக சாதாரணமான நடிகன் என்று நினைத்து நடித்தால் போதும் என அறிவுரை கூறினார்.
படம் முடித்து விட்டு என்னுடைய அம்மாவையும் , தாணு சாரையும் அழைத்து படத்தை திரையிட்டோம். அவர் திரைப்படத்தை பார்த்துமுடித்துவிட்டு இடைவெளியில் ஏதாவது கூறுவார் என எதிர் பார்த்தேன். அவர் முழு படத்தையும் பார்த்து முடித்து விட்டு என்னை அழைத்து மிகவும் பாராட்டினார் . மொத்தம் 50 நாட்களில் எங்கள் படம் படமாக்கபட்டு இருப்பதை கேள்விப்பட்டு எங்களை பாராட்டினார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு பிரபாகர் மற்றும் சந்தோஷ். இப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் மிக சிறந்த முறையில் வந்துள்ளது. மேலும் ரஜினி சார் படத்துல வருகின்ற பாடலான “ நம்ம ஊர் சிங்காரி “ பாடல் அப்படியே படமாக்கபட்டுள்ளது.
மேலும் நடனம் வகுப்புக்கு நான் சென்றது கிடையாது .இப்படத்தில் இரவு நேரங்களில் தான் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. படத்தை அனைவரும் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.
மிக சிறிய குழு இனைந்து மிக சிறந்த முறையில் ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளது. தயாரிப்பாளர் அருமை சந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார்” என்றார் லுத்புதீன் பாஷா.