கே பாக்யராஜ், சோனியா அகர்வால், ராம்தேவ், ரிஷிகாந்த் பிரணா, சிவகுமார், ராஜகோபால், மதுரை ஞானம் நடித்துள்ளனர். ராம்தேவ் இயக்கியுள்ளார்.
சோனியா அகர்வால் ஒரு மருத்துவமனை ஊழியர். அவரது கணவர் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலையை புலனாய்வு செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ்.
விசாரணையில், பல அதிர்ச்சிகரமான உண்மைகளைக் கண்டுபிடிக்கிறார். அது என்ன? என்பதைப் பரபரப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக
கூறியுள்ள படம் தான் ‘மூன்றாம் மனிதன்’ .
பாக்யராஜ் இறந்தது ஒரு போலீஸ் அதிகாரி என கண்டுபிடிக்கிறார். இறந்தவரின் மனைவியாக வரும் சோனியா அகர்வாலிடம் முதலில் விசாரணையைத் தொடங்குகிறார். பிறகு
குடிப் பழக்கத்துக்கு ஆளான ராம்தேவை அழைத்து விசாரிக்கிறார் பாக்யராஜ்.
ராம்தேவ் அவரது வாழ்க்கையை விவரிக்கிறார். மதுப்பழக்கத்தால் தனது குடும்பம் சீரழிந்துவிட்டதை பாக்யராஜிடம் கூறுகிறார். இறந்து போன போலீசுக்கும் தனது மனைவிக்கும் தொடர்பு இருந்ததாகவும் கூறுகிறார் ராம்தேவ்.விசாரணையை தீவிரப்படுத்துகிறார் பாக்யராஜ். இறுதியில் அந்த கொலை யாரால் எதனால் நடந்தது.? என்பதே படத்தின் மீதிக் கதை.
மதுவால் ஒரு குடும்பம் சீரழிவதைக்
காட்சிகளின் மூலம்
கண்முன்னே கொண்டு வந்தியிருக்கிறார் இயக்குநரும் நடிகருமான ராம் தேவ். அதற்காக அவரைப் பாராட்டலாம்.ஒரு குடும்பத்தில் மூன்றாம் மனிதன் நுழைவு சீரழிவு ஏற்படுத்தும் என்பதைக் கூறி கணவன் மனைவி உறவின் பலம் பலவீனங்களையும் அலசியுள்ளார் இயக்குநர்.
ராம்தேவ் மனைவியாக நடித்த பிராணா தனது தோற்றத்தாலும் நடிப்பாலும் காட்சிக்கு பலம் சேர்த்திருக்கிறார். கே பாக்யராஜ் மற்றும் சோனியா அகர்வாலின் நடிப்பு ஓகே.
வசனங்களில் சற்றுக் கவமை செலுத்திகியிருக்கலாம். சில கொச்சை வசனங்களையும் தவிர்த்திருந்திருக்கலாம்.
கதையின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், அதைக் காட்சிகள் மூலம் படைப்பாக கொடுக்கும்போது கவனம் தேவை.
ஒளிப்பதிவு மற்றும் இசை ஓகே. ரகமாக இருக்கிறது.
புதிய படமாக புதுமுக பங்களிப்பில் உருவானாலும்
நல்லதொரு கருத்தைச் சொல்லி இருக்கும் இயக்குநரின் முயற்சியைப் பாராட்டலாம்.