
யோகிபாபுவின் தர்மபிரபு மற்றும் கூர்க்காவின் வெற்றியை தொடர்ந்து வெளிவரவிற்கும் படம்தான் “காதல் மோதல் 50 /50”. இப்படத்திற்கு தரண்குமார் இசை அமைத்துள்ளார். பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட திரைப்படம் “த்ரயா” என்ற படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் யோகிபாபுவிற்கென பிரத்யேக பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்க உள்ளார்.
தற்போது மு.மாறன் அவர்களின் இயக்கத்தில் உதயநிதிஸ்டாலின் அவர்களை நாயகனாக வைத்து தயார் ஆகி கொண்டிருக்கும் “கண்ணைநம்பாதே ” என்ற படத்தின் தயாரிப்பாளர் திரு.வி.என்.ஆர் அவர்கள் இப்படத்தினை தன் நிறுவனம் லிபிசினி கிராப்ட்ஸ் மூலம் தயாரித்து வருகிறார்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் நிலையில் உள்ளது .