தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் டி ஆர் இன்று தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடினார்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டு தனது அன்பைப் பகிர்ந்து கொண்டார் சிலம்பரசன் டி ஆர்.



