வான்சன் மூவீஸின் 2 புதிய படங்களை ராதாமோகன், மகேந்திரன் ராஜமணி இயக்குகிறார்கள்
அருண் குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ரம்யா நம்பிசன் நடிப்பில் உருவான சேதுபதி
படத்தை தயாரித்தார்.
ஒரே ஷெட்யுலில் 50 நாட்கள் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு குறிப்பிட்ட தேதியில்
வெளியாகி அனைவரின் பேராதரவோடு பெரும் வெற்றியை பெற்றது.
கதை தேர்வு, திட்டமிடல், கையாளுதல் இவை மூன்றும் தான் வான்சன் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலதனம் என கூறும் தயாரிப்பாளர் ஷான் சுதர்சன் 2 புதிய படங்களை
தயாரிக்கவுள்ளார்.
படம் – 1
அபியும் நானும், மொழி, பயணம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய
ராதாமோகனின் கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கத்தில் புதிய படமொன்றை
பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில்
அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கிறார்.
எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவையும், ஜில் ஜங் ஜக் படத்தின் இசையமைப்பாளர் விஷால்
சந்திரசேகர் இசையையும், கதிர் கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.
கதாநாயகி மற்ற நடிகர் நடிகையர் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு
நடைபெற்று வருகிறது.
படம் – 2
C.S.அமுதன் இயக்கிய ”தமிழ்படம்”, மற்றும் ”ரெண்டாவதுபடம்”, முருகானந்த் இயக்கத்தில்
வெளியான ”இனிமே இப்படித்தான்” மற்றும் ”வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்”, ஆகிய
திரைப்படங்களில் ”இணை இயக்குநராகவும்”, நடிகர் சந்தானத்திடம் பல படங்களில்
”வசனகர்த்தாவாகவும்” பணியாற்றிய மகேந்திரன் ராஜமணி, வான்சன் மூவிஸ், ஷான்
சுதர்சன் தயாரிக்கும் புதிய படத்தில் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
வான்சன் மூவிஸ் சார்பாக ஷான் சுதர்சன் மிகுந்த பொருட்செலவில் அனைவரும் ரசிக்கும் படி
ஜனரஞ்சகமான முறையில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் இப்படத்தில் ஜெய்
கதாநாயகனாக நடிக்கின்றார். இவர்களுடன் கருணாகரன், காளி வெங்கட், நவின், நான்
கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படத்திற்கு ஒளிப்பதிவு மகேஷ் முத்துசுவாமி, இசை சந்தோஷ் தயாநிதி, படத்தொகுப்பு – கோபி
கிருஷ்ணா, கலை இயக்கம் – வி. சசிகுமார்.
கதாநாயகி மற்ற நடிகர் நடிகையர் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு
நடைபெற்று வருகிறது
விரைவில் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் சென்னையில் துவங்குகிறது.
மக்கள் தொடர்பு – நிகில்
தயாரிப்பு மேற்பார்வை – என்.சுப்பு
நிர்வாக தயாரிப்பு – கே.பி.பஷிர் அஹமது
தயாரிப்பு – ஷான் சுதர்சன்