விஜய் ஆண்டனியின் புதிய அரசியல் படம் ‘சக்தித் திருமகன்’ செப்டம்பர் 5-ல் வெளியாகிறது!

சைலன்ட் ஹீரோ விஜய் ஆண்டனி என் நடிப்பில் அரசியல் அதிரடிப் படமாக  ‘சக்தித் திருமகன்’ உருவாகியுள்ளது.இப்படம் உலகமெங்கும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.

ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டிய ஒரு டீசரைத் தொடர்ந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘சக்தித் திருமகன்’ செப்டம்பர் 5, 2025 அன்று உலகளாவிய திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது.

அருவி மற்றும் வாழை படைப்புகளில் கதைப்பகுதியில் பங்களித்த அருண் பிரபு புருஷோத்தமன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

‘சக்தித் திருமகனி’ன் கவர்ச்சிகரமான டீசர் பார்வையாளர்களின் கவனத்தை ஏற்கெனவே ஈர்த்துள்ளது. 2 நிமிட 15 வினாடிகள் கொண்ட இந்த ப்ரோமோ, கதாநாயகனின் இயல்பைப் பற்றி விவாதிக்கும் கதாபாத்திரங்களுடன் தொடங்குகிறது . அது விஜய் ஆண்டனியின் அமைதியான ஆனால் வீரியமிக்க குறிப்பிடத்தக்க இருப்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.

“புதிய அரசியல் வெற்றிப்படம்” என்று தயாரிப்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த படம், கூர்மையான கதைசொல்லல், அடுக்கடுக்கான கதாபாத்திர சித்தரிப்புகள்,பிரமிக்க வைக்கும் காட்சிப் பின்னணிகள், உயர் தொழில்நுட்ப நேர்த்தி என புத்துணர்ச்சியூட்டும் கலவையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.

கண்களை விரிய வைக்கும் காட்சிப் பிரம்மாண்டங்கள், ரேசர் பிளேடை போல கூர்மையான படத்தொகுப்பு என அந்த டீசரே எதிர்பார்ப்புகளை வானளவுக்கு உயர்த்தி உள்ளது.

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார், மேலும் வாகை சந்திரசேகர், சுனில் கிருபளானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரா, கிரண், ரினி பாட், ரியா ஜித்து மற்றும் மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில், இந்த செப்டம்பர் 5 ஆம் தேதி சக்தி திருமகன் ஒரு சக்திவாய்ந்த சினிமா அனுபவமாக தயாராகி வருகிறது