மோடியின் மத்திய அரசு எடுத்த முடிவு பற்றி விஜய் தனது கருத்தாக ஊடகங்களிடம் பேசியபோது:
” மத்திய அரசு எடுத்த இந்த முடிவு நிஜமாகவே நல்ல விஷயம் தான் கண்டிப்பா இது நம்ம நாட்டுக்கு தேவையான துணிச்சலான ஒரு முடிவு தான். கண்டிப்பா இது நம்ம நாட்டோட பொருளாதாரத்தை வளரத்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு நோக்கம் பெரியதாக இருக்கும் போது அதற்கான பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அந்த நோக்கத்தை விட பாதிப்பு அதிகமாகி விடக் கூடாது என்பதை தான் பார்த்து கொள்ள வேண்டும். சில விஷயங்களை தவிர்த்திருக்கலாமோ என்ற சின்ன எண்ணம் தான்.
சில பொதுமக்கள் சாப்பாடு வாங்கி சாப்பிட முடியாமல், மருந்து மாத்திரை வாங்க முடியாமல் , திரையரங்களில் டிக்கெட் வாங்க முடியாமல் , பயணத்தின் போது ஊர் திரும்ப முடியாமல் இருக்கும் நபர்களை பார்க்கும் போது தேவையில்லாமல் இவர்கள் அனைவரும் பாதிக்க படுகிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
நான் தொலைகாட்சி செய்திகளில் சில விஷயங்களை பார்த்தேன் மனதிற்கு அது கஷ்டத்தை அளிக்கும் விதத்தில் இருந்தது. “ தன் பேத்தியின் கல்யாணத்துக்கு நகை எடுக்க ஒரு பாட்டி பணம் சேர்த்து கொண்டு வருகிறார்கள் , நகை கடையில் பணம் செல்லாது என்றதும் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் புதிதாக பிறந்துள்ள குழந்தை சரியான சிகிச்சை கிடைக்காமல் இறந்துள்ளார். இதை போல் சில விஷயங்களை தவிர்த்திருக்காலம்.
நாட்டில், ஒரு 20 % பணக்காரர்கள் இருப்பார்கள். அதில் இருக்கும் சிறு குழுக்கள் செய்யும் தவறால் எல்லா மக்களும் பாதிக்கபட்டால் என்ன செய்வது ?
இது இதுவரை யாரும் பண்ணாத யாரும் செய்யாத புதிய முயற்சிதான் இது .அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இப்படி ஒரு பிரச்னைக்கு தீர்வு காணும் போது , ஒரு சட்டத்தை அமல்படுத்தும் போது அதற்கான முயற்சிகளை எடுக்கும் போது அதனால் என்ன விளைவுகள் வரும் என்பதை ஆராய்ந்து முடிவு எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இன்று எல்லாம் நன்றாக உள்ளது என்பதை அறிய முடிகிறது. சீக்கிரமாகவே மத்திய அரசு எல்லாவற்றையும் சரி செய்தால் நன்றாக இருக்கும்” என்றார் .