இன்று சுதந்திரம் என்பதை இளைஞர்கள் பொறுப்பில்லாத்தனம் என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிப் பேசுகிறது இந்த ‘வெப்’ (WEB) படம். வேலன் புரொடக்ஷன் சார்பாக வி.எம் முனிவேலன் தயாரிப்பில், ஹாரூன் இயக்கியுள்ளார்..ஒளிப்பதிவு கிறிஸ்டோபர் ஜோசப் .
கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். நட்டி நட்ராஜ் ,ஷில்பா மஞ்சுநாத், அனன்யா மணி,மொட்டை ராஜேந்திரன், முரளி ,ஷாஸ்வி பாலா ,சுபப்ரியா மலர் நடித்துள்ளனர்.
“வெப்” (WEB) படத்தின் கதை என்ன?
அபிநயா ,நிஷா ,மஹா மூவரும் நெருங்கிய தோழிகள். மூவரும் ஒரு கார்பரேட் ஐடி நிறுவனத்தில் பணி புரிகிறார்கள்.கணினி தொழில்நுட்பத்தின் மூவருமே கெட்டிக்காரர்கள்.கை நிறைய சம்பாதிப்பதால் மனம் நிறைய விடுதலை உணர்வோடு இருக்கிறார்கள் .வார இறுதி நாட்களில் பார்ட்டி கூத்துஆட்டம் பாட்டம் என்று ஆர்ப்பாட்டமாக சுதந்திரமாகத் திரிகிறார்கள்.
அது ஒரு கட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு வரை கொண்டு செல்கிறது.
அப்படி ஒரு சந்தோச கூத்தடித்துக் கொண்டு திரும்பும் போது அவர்களை நட்டி நட்ராஜ் கடத்துகிறார்.அவர்களோடு பணிபுரியும் ஒரு இளம் ஜோடியும் கடத்தப்படுகிறது.
கடத்தப்பட்ட பெண்களை ஒரு தனியான ஒதுக்குப்புறமான வீட்டில் தனி அறையில் வைத்து கட்டிப் போட்டு மிரட்டி சித்திரவதை செய்யப்படுகிறது.அவர்களில் ஒருவர் கொலை செய்யப்படுவதாகவும் காட்சி வருகிறது.வீதியில் வரைந்து போய் இருக்கிற மூன்று பெண்களும் செய்வதறியாமல் தவிக்கிறார்கள் அவர்களை நட்டி ஏன் கடத்தினார்? அவர்களுக்கும் நட்டிக்கும் என்ன தொடர்பு ?என்பதை வெப் படத்தின் மீதிக் கதை சொல்கிறது.
நட்டுக்கு பாசிட்டிவாகவும் நெகட்டிவாவும் பொருந்துகிற ஒரு தோற்றம் உள்ளது.
அந்தத் தோற்றத்தை இயக்குநர் சரியாகப் பயன்படுத்திய வெற்றி பெற்றுள்ளார்.நட்டி வழக்கம் போல் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இளமை துள்ளலுடன் வரும் பெண்கள் சுதந்திரம் ஜாலி என்று இளைஞர்களைக் கவர்கிறார்கள்.
மொட்டை ராஜேந்திரன் இடைவேளை பின் வந்து தன்பாணியில் சிரிக்க வைக்கிறார்.
கார்த்திக் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கச்சிதம்.
முதல் பாதி முழுக்க நம்மை இருக்கை நுனியில் வைத்திருக்கும் இயக்குநர் பின் பாதியில் சில வழக்கமான காமெடிக் காட்சிகளை கலப்பதால் சற்று தளர்வூட்டி விடுகிறார்.
படத்தின் காட்சிகள் இன்டோரில் பெரும்பாலும் நடக்கின்றன.அந்த குறை தெரியாத அளவிற்கு கிறிஸ்டோபர் ஜோசப் பின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.படத்தின் முதல் பாதியில் இருந்த இறுக்கம் பின்பாதியில் சற்று குறைகிறது. இரண்டாவது பாதையில் மேலும் நகாசு வேலை செய்திருந்தால் ஒரு முழு நேர்த்தியான படமாக இது மாதிரி இருக்கும்.அதற்கு பட்ஜெட் ஒரு காரணமாக இருக்கலாம்.
இப்போது ஏராளமான திரில்லர் படங்கள் வருகின்றன ஆனால் குடும்பத்தோடு பார்க்க முடியும் என்றும் பெற்றோர்களுக்குப் பரிந்துரை செய்யும்படியும் படங்கள் . ஆனால் இந்த வெப் திரைப்படத்தை இளைஞர்கள் மட்டுமல்ல பெற்றோரும் பார்க்கக்கூடிய படம் என்று கூறலாம். அந்த நோக்கத்திற்காக இந்தப் பட இயக்குநரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.