இளவரசுவின் இருமகன்கள் சசிகுமார்,ஆனந்த நாக். இவர்களில் தம்பியான ஆனந்த நாக் ஊர் மரியாதை மிக்க பிரபுவின் மகளைக் காதலிக்கிறார்.
வேளாண் கல்லூரியில் பணிபுரியும் மியாஜார்ஜை அண்ணன் ச்சிகுமார் விரும்புகிறார். முதலில் தம்பியின் காதலுக்கு உதவப்போகிறார் அண்ணன் சசி. கோவில் திருவிழாவில் காதலியை கடத்திக் கொண்டு வந்து விடுவதாகத் திட்டம் ஆனால் தவறுதலாக வேறு ஒரு பெண்ணை முகத்தில் மயக்க ஸ்ப்ரே துணியால் பொத்தி தூக்கிக் கொண்டு வந்து விடுகிறார்கள்.
அந்தப் பெண்ணுக்கோ பிரபுவின் தங்கை மகனுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. தன் பெண் வீட்டைவிட்டு வெளியே போனது பற்றி ஊரர் தூற்றவே தந்தை இறந்து விடுகிறார்.
தன்னால்தான் அந்தப் பெண்ணுக்கு இந்த நிலை என்று சசி அவருக்கு வாழ்க்கை கொடுக்கிறார். சசி- மியாஜார்ஜ் காதல் என்னவாகிறது. தம்பியின் காதல் என்னவாகிறது என்பதே மீதிக்கதை.
படம் தொடங்கியதுமே பிரபு. விஜி சந்திரசேகர் வருகிறார்கள். ஒரே அப்பாவின் இருதாய் பிள்ளைகள் என்கிற மன வருத்தம் என அவர்களுக்குள் முரண்பாடு முடிச்சு விழுகிறது. பஞ்சாயத்து தேர்தலில் தன் கணவனுக்கு அண்ணன் பிரபு விட்டுக் கொடுக்க வில்லை என்கிற விஜி சந்திரசேகரின் வருத்தம் விரோதம் ஆகி வளர்கிறது.
பிறகு வரும் சசி வரவுக்குப்பின் கதையில் கலகலப்பு .மியா ஜார்ஜ் உடன் காதல் வளர்ப்பது என வானவில்லாகின்றன காட்சிகள்.
தன் தம்பியின் காதலுக்கு அண்ணன் சசி உதவுவது கலகல காட்சிகள் .இப்படிப் படம் முழுக்க ரசிக்கும் காட்சிகள் பலவுண்டு.
படத்தில் பாராட்ட வேண்டியது நடிகர்களுக்கான பாத்திரச் சித்தரிப்பு. அதை சிறப்பாகச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் வசந்தமணி.
பிரபு, விஜி சந்திரசேகர், இளவரசு, அவரது மகன்,சசிகுமார், ‘ஒத்தாசை’ தம்பி ராமையா, அவர் மனைவி வாடாமல்லி , இளவரசு ஜோடி ரேணு என அனைவரும் பதிகிற குணச்சித்திரங்கள். படம் தொடங்கியதும் ஆங்காங்கே போடப்படும் முடிச்சுகள் சிறிது சிறிதாக அவிழ்வதும். அந்த விளையாட்டை படம் முடியும்வரை தொடர்வதும் இயக்குநரின் திறமை.
சசிகுமார் தன் வணிகப்பரப்பை அதன் எல்லையை அதிகப்படுத்தும் கிராமத்துக் கதையின் நாயகன் ,அவரும் சோடை போகவில்லை.
அடக்கி வாசிக்கும் பிரபுவும் ஆவேசம் காட்டும் விஜி சந்திரசேகரும் எதிர் துருவங்களாக கவர்கிறார்கள்.
மலையாளம் பேசி. மியாஜார்ஜும் பாந்தமாக கவர்கிறார். ச்சியால் கைப்பிடிக்கப்படும் நிகிலா விமலும் சோடை போகவில்லை.’ஒத்தாசை’ நாக வரும் தம்பி ராமையா மனைவி மீது சந்தேகப்படுபவராக வந்து முழுநீள கலகலப்பூட்டுகிறார்.
காதலியை விட்டுவிட்டு திடீர் திருமணம் செய்கிற சசிகுமாரின் முடிவு தேவர்மகனை அப்பட்டடமாக நினைவு படுத்தினாலும் அதை மறந்து ரசிக்க நிறைய உள்ளன.
தஞ்சைப் பகுதி மண், மொழி, மனிதர்களை இயல்பாகக் காட்ட முயன்றுள்ளார். இமானின் இசையில் பாடல்கள் எல்லாமே சசிக்கேற்ற ருசி. வெற்றிவேல் விழமாட்டான் .