ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் பிரபாஸ் ஆகியோர் இந்திய சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தை துவக்கி, மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். சலார் பாகம் 2 மற்றும் சலார் பாகம் 2 க்குப் பிறகு அடுத்ததாக பேக்-டு-பேக் படங்களில் இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வு, இதுவரையிலான திரையுலகில் ஒரு நடிகருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையிலான மிகப்பெரிய ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இது பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே இருவருக்கும் மிக முக்கியமான மைல்கல் அத்தியாயமாகும்.
ஹோம்பாலே பிலிம்ஸ், பல முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில், பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இது இந்திய பார்வையாளர்களுக்கு உயர்தர சினிமா அனுபவத்தை வழங்குவதற்கான ஹோம்பாலேவின் இடைவிடாத முயற்சியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பலதரப்பட்ட ஜானர்களில், கலாச்சார ரீதியாக எதிரொலிக்கும் கதைக்கருக்களுடன் மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமான திரைப்படங்களை தந்து வரும் தொலைநோக்கு தயாரிப்பு நிறுவனமா
க ஹோம்பாலே வளர்ந்து வருகிறது. KGF பார்ட் 1, KGF பார்ட் 2, காந்தாரா, சாலார் 1 ஆகியவற்றின் உலகளாவிய வெற்றியைத் தொடர்ந்து, ஹோம்பாலே ரசிகர்களை ஈர்க்கக்கூடிய திரைப்பட வரிசையை உருவாக்கியுள்ளது. இதில் இப்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காந்தாரா 2 மற்றும் KGF பார்ட் 3 மற்றும் பிரபாஸுடனான அதன் புதிய முயற்சிகளும் அடங்கும்.
இந்திய சினிமாவில் மிகப்பெரும் ஸ்டார்களில் ஒருவரான பிரபாஸ், ஹோம்பாலேவின் லாண்ட்மார்க் படமான சாலார் 2, ராஜா சாப், ஸ்பிரிட், கல்கி 2 மற்றும் ஃபௌஜி உட்பட, அவரது பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹோம்பாலே உடனான பல திரைப்படங்களுக்கான ஒப்பந்தம், இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடனான அவரது வலுவான உறவைப் பிரதிபலிக்கிறது, ஹோம்பாலே பேனரின் கீழ் நான்கு படங்களில் அவர் பணியாற்றுகிறார். பிரபாஸ் போன்ற ஒரு பான் இந்திய ஸ்டாருடன், மூன்று திரைப்படங்களில் ஓப்பந்தமாவதே ஒரு அரிய சாதனையாகும். இந்த இணைவு, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அனைத்து திரைத்துறையையும் இணைத்து, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மார்கெட்டில் இருந்து முக்கிய வணிகத்தைப் பெறக்கூடிய ஒரே நட்சத்திரம் என்பதால், பிரபாஸ் இப்போது மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குகிறார். வேறு எந்த நடிகரும் எட்ட முடியாத உயரம் இது.
கேஜிஎஃப் 1, கேஜிஎஃப் 2 மற்றும் சாலார் பார்ட் 1 போன்ற திரைப்படங்களைத் தந்து, ஹோம்பாலேவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த பிரசாந்த் நீல் இயக்கிய சலார் பார்ட் 2 விலிருந்து, பிரபாஸுடனான இந்த பார்ட்னர்ஷிப் தொடங்குகிறது. ஹோம்பாலேவுடன் சேர்ந்து, பிரபாஸ் மறக்க முடியாத திரைப்படங்களை உலகளவில் பார்வையாளர்களுக்கு கொண்டு வர தயாராகிவிட்டார். ஹோம்பாலே பிலிம்ஸின் நிறுவனர் விஜய் கிரகந்தூர், இந்த திட்டம் குறித்து கூறுகையில்: “ஹோம்பாலேவில், எல்லைகளைத் தாண்டிய கதைசொல்லலை முழுமையாக நாங்கள் நம்புகிறோம். பிரபாஸுடனான எங்கள் ஒத்துழைப்பு, காலத்தால் அழியாத சினிமாவை உருவாக்கும் ஒரு படியாகும், இது எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் மற்றும் மகிழ்ச்சி தரும்.
சலார் பார்ட் 2, காந்தாரா 2 மற்றும் கே.ஜி. எஃப் பார்ட் 3, என ஹோம்பாலே பிலிம்ஸின் அடுத்தடுத்த படங்கள், உலகளவில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அற்புதமான சினிமாவை உருவாக்குவதில் அதன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த திரைப்பட வரிசை, ரசிகர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது, பிரபாஸ் ஹோம்பாலே இணைவு, இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு நினைவு சின்னமாக, இருக்கும்.
கன்னடத்தில் கே.ஜி.எஃப் & காந்தாரா, தெலுங்கில் சாலார், தமிழில் ரகு தாத்தா, மலையாளத்தில் ஃபஹத் பாசிலை வைத்து தூமம் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்களிலும் மெயின்ஸ்ட்ரீம் ஹிட் கொடுக்க முடிந்த ஒரே தயாரிப்பு நிறுவனமாக ஹோம்பலே பிலிம்ஸ் திரைப்படத் துறையில் பெரும் அதிர்வுகளை உருவாக்குகியுள்ளது. பாகுபலி 1&2, கேஜிஎஃப் 2, கல்கி மற்றும் சாலார் போன்ற உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 20ல் 5ல் பிரபாஸிடன் இணைந்துள்ளது
பிரபாஸ்-ஹோம்பாலே கூட்டணி, இந்திய சினிமாவில் ஒரு களிப்பூட்டும் புதிய சகாப்தத்தை வெளிப்படுத்துகிறது, இது புதிய வரையறைகளை அமைக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும், தைரியமான கதைசொல்லலின் சக்தியை பெரிய அளவில் எடுத்துச் செல்லும்.