நாடகம், சினிமா, தொலைக்காட்சி போன்ற வற்றைத் தொடர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களின் அடுத்த பரிமாணமாக இணைய தொடர்கள் பிரபலமடைந்து வருகின்றன.
அப்படி ஒரு இணைய தொடராக ஆகா ஓடிடி தளத்தில் வெளியாகிற தொடர் தான் ‘ஆன்யாவின் டுடோரியல்’ அதாவது ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’
அமானுஷ்ய அம்சம் கதை ஒன்றை எடுத்துக் கொண்டு படமாக்கி இருக்கிறார்கள்.
ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதிஷ் முக்கியமான பாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கிறார்கள்.இயக்கம் பல்லவி கஞ்சி ரெட்டி.
ரெஜினா , நிவேதிதாஇருவரும் சகோதரிகள். தந்தை இழந்த தாயின் ஆதரவில் வளர்பவர்கள்.
நிவேதிதா சமூக வலைதளங்களில் பரபரப்பாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். தனது ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்து கொண்டிருப்பார் . இது அக்காவுக்குப் பிடிக்காது. அக்கா தங்கை மோதலில் தங்கை வீட்டை விட்டு வெளியேறி தனியே ஒரு பிளாட்டுக்குள் வசிக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தங்கை உடலில் ஒரு தீய சக்தி நுழைந்து கொண்டு ஆட்டுவிக்கிறது.தங்கையைக் காப்பாற்ற அக்கா என்ன செய்கிறார்? அன்யா பேயிலிருந்து மீண்டாரா இல்லையா என்பதே கதை.இதை மையப்படுத்தி ஒரு தொடராக உருவாக்கி இருக்கிறார்கள்.
ஏழு அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரில் ஆரம்பத்தில் இணைய தொடர்களில் உரிய சூத்திரத்தில் கதை நகர்ந்தாலும் போக போக விறுவிறுப்பு கூடி பரபரப்பு களை கட்டுகிறது.படத்தில் பேய் வருகிற காட்சிகளை விட பேய் வருகிறது என்பது பற்றிப் பயமுறுத்தும் காட்சிகள் அதிகம்.
கதை ஒரே ப்ளாட்டுக்குள் நடப்பது பல்வேறு காட்சி சாத்தியங்களைக் குறைத்து விடுகிறது.அதை விசாலப்படுத்தியிருந்தால் இன்னும் சுவாரசியமான காட்சிகள் வந்திருக்கும்.
ரெஜினாவும் நிவேதிதாவும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள் .இருந்தாலும் குறிப்பிட்ட பாத்திரங்களையே பார்ப்பது ஒருவகை சலிப்பைத் தருகிறது.
ஒளிப்பதிவும் இசையும் போட்டி போட்டுக் கொண்டு காட்சிகளைத் தூக்கி நிறுத்துகின்றன.
படத்தில் ரத்தக்களரியைத் தவிர்த்து இருந்தால் குடும்பத்தினருடன் பார்க்கும் படியாக இருக்கும்.இயக்கம் பல்லவி கஞ்சி ரெட்டி,ஒரு பெண்ணா இப்படிச் சிந்தித்து இயக்கியிருக்கிறார் என்று வியக்க வைக்கிறது.
ரெஜினா, நிவேதா இருவரையுமே அதிகம் காட்டுகிறார்கள். எனவே இளைஞர்களுக்குப் பிடிக்கும்.குடும்பத்தினரைத் தவிர்த்துத் தனித்தனியாகப் பார்த்து மகிழலாம்.