அப்புச்சி கிராமம் என்கிற ஊருக்கு விண்கல் விழுகிறது. அது தொடர்பான பின்விளைவுகள் பற்றியதுதான் கதை.
அப்புச்சி கிராமம் பலதரப்பட்ட பாமரமக்கள் வாழும் ஊர். அந்த ஊர் ஒரு பண்ணையாரின் இரு தாரத்து மகன்களின் பகையால் பிளவுபட்டுக் கிடக்கிறது. எந்தக் காரியம் நடப்பதாக இருந்தாலும் ஏட்டிக்குப் போட்டி. இந்நிலையில் அந்த ஊரை நோக்கி விண்கல் விழப்போகிறது. தாக்குதல் நடக்கும் என்று நாள் குறிக்கப் படுகிறது.
தங்கள் கிராமம் தாக்கப் படலாம். தங்களை நோக்கி மரணம். வந்து கொண்டிருக்கிறது. என்று தெரிந்ததும் அந்த ஊர் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படுகிறது.
வீறாப்பு, கௌரவம், பிடிவாதம் எல்லாம் தளர்கிறது தங்களை எப்படி உணர்கிறார்கள். என்பதே மீதிக்கதை.
இது நாயகன் நாயகி கதையல்ல. ஒரு கிராமத்தின் முகமே கதை. விண்கல் தாக்குதல் ஏற்படுத்தும் பயமே சம்பவங்களை நகர்த்துகின்றன.
ஜி.எம். குமார், ஜோ.மல்லூரி, கதிர், கஞ்சா கருப்பு என எல்லாருமே தத்த மது வேலைகளை செய்திருக்கிறார்கள். எந்தப் பாத்திரமும் உயர்த்திப் பிடிக்கப்பட வில்லை. ஒட்டுமொத்த படமும் கிராமம் அதன் பயம் என்கிற உளவியல் பார்வையில் நகர்கிறது.
படத்துக்கு ஒளிப்பதிவும் இசையும் இரு கண்களாக உள்ளன. விண்கல் தாக்குதல் பற்றிய கதை என்பது புதுமுக இயக்குநர் ஆனந்துக்கு ஒரு புதுமைதான் .ஆனால் அதுவே போதுமா? படத்தில் ஏதோ ஒரு போதாமையை உணர வைக்கிறாரே.
பாச உணர்வுகளையும் வேஷ உணர்வுகளையும் மேம்போக்காக இல்லாமல் அழுத்தமாகச் சொல்லியிருந்தால் படம் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.