‘அரிமாபட்டி சக்திவேல்’ விமர்சனம்

சார்லி,பவன்.கே, மேகனா எலன், இமான் அண்ணாச்சி, சூப்பர் குட் சுப்ரமணி, கராத்தே வெங்கடேஷ், ஹலோ கந்தசாமி,பிர்லா போஸ்,அழகு,செந்தி குமாரி,சக்திவேல் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு ஜே பி மேன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மணி அமுதவன் இசையமைத்திருக்கிறார்.படத்தொகுப்பு ஆர்எஸ் சதிஸ் குமார். லைப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கே,மற்றும் அஜிஸ்.பி தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் கதை 90களில் தொடங்குகிறது.திருச்சி அருகே அரிமாபட்டி கிராம்.அங்கே வசிக்கும் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாட்டை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் அந்த கிராமத்தில் வசிக்கும் நயாகன் சக்திவேல் வேறு ஒரு சாதிப் பெண்ணை காதலிக்கிறான். இதற்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு.
மீறி நாயகன் சக்திவேல் நாயகியை வெளியூருக்கு கூட்டிச் சென்று திருமணம் செய்கிறான்.

இதனால் கட்டுப்பாட்டுக்கு பெயர் பெற்ற அந்தக் கிராமத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன.முடிவு என்ன என்பதுதான் படம்.

நாயகன் பவன் தனது கதாபாத்திரத்தைப் புரிந்து நடிக்க முயற்சித்துள்ளார்.நாயகி மேக்னா தனது பேசும் விழிகள் ,விரிக்கும் புன்னகை என்று வசீகரிக்கிறார்.

சக்திவேலின் அப்பாவாக வருகிறார் சார்லி, தாத்தாவாக வருகிறார் அழகு.மூத்த நடிகர் சார்லி தனது அனுபவ நடிப்பைக் கொடுத்து படத்திற்குப் பலமாக அமைந்துள்ளார்.

பிர்லா போஸ் பாத்திரம் அறிந்து குறைவில்லாத நடிப்பை வழங்கியுள்ளார்.படத்தில் அரசியல்வாதியாக வலம் வரும் இமான் அண்ணாச்சி சிரிக்க வைக்க முயல்கிறார்.மணி அமுதவன் இசை ஓகே. ஜெ. பி. மேனின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகைக் காட்டியுள்ளார்.

படத்தை மேலும் கவனம் செலுத்தி உருவாக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.