மார்ச் 12 ஆம் தேதி ( நாளை ) ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில்,
தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) – சிறந்த திரைப்படம்,
சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்),
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி),
சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்),
சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும்
சிறந்த ஆடை வடிவமைப்பு
(ஏகா லக்கானி) ,
ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பாக லைக்கா ,திரு. ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் , மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் திரு. ஸ்ரீகர் பிரசாத் மற்றும் திரு. ரவி வர்மன் ஹாங்காங் பயணம் மேற்கொள்கின்றனர்.