தமிழ்நாட்டு இளைஞர்களின் பொழுதுபோக்கு ஆர்வத்தை திசைதிருப்பியதில் பியான்ட் பௌண்டரீஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தினர் உருவாக்கி அளித்தது தான் சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மாலில் உள்ள “”.. தற்போது இங்கு 3 விதமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. எக்ஸ்.டி.சினிமா என்ற ஐந்து பரிமாண மற்றும் ஏழு பரிமாண திரையரங்கு, மைனஸ் 5 டிகிரிக்கும் குறைவான குளிர்நிலை கொண்ட பனிக்கட்டிகளால் நிறைந்த ஸ்நோ ப்ளே,இந்தியாவின் முதலாவது ஹோலோகிராபிக் திரையரங்கம்.. ஆகிய இம்மூன்றும் பியாண்ட் பௌண்ட்ரீஸ் நிறுவனத்தின் உருவாக்கங்களே… இந்த வரிசையில் மற்றொரு ஆச்சர்யத்தை பரிசளிக்கிறது இந்நிறுவனம், அதுதான் த்ரில் அட்வெண்ட்சர்.. பேரைக் கேட்டாலே நடுங்குதுல்ல..ஆம், அதுதான் இந்த பொழுதுபோக்கு அம்சத்தின் புதுமை..

இந்த உலகம் முழுவதும் பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அவற்றில் ஆகச்சிறந்தவற்றை சென்னைக்கு கொண்டு வருவதில் பெருமிதம் கொள்வதாக கூறுகிறார்,இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் அசோக் வர்கீஸ்.இதேபோன்று வைல்ட் ட்ரைப் ராஞ்ச் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சதீஷ் ஜம்போ கூறுகையில், நமது சென்னை மாநகரத்திற்கு கூடுதல் விளையாட்டு அம்சங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் தேவைப்படுகின்றன. அதற்கு மிகப்பொருத்தமான இடமாக ஐ ப்ளே திகழ்கிறது..வயது வித்தியாசமின்றி அனைத்து பாலினரையும் கவர்ந்து சர்வதேச தரத்திற்கு இதன் பொழுதுபோக்குகள் உள்ளன என்கிறார் அவர்… இவ்வளவு சிறப்பு மிக்க த்ரில் அட்வெண்ட்சர் மையத்தின் கலை இயக்குநரான ஜானகி ராமன் கூறுகையில், கற்பனையையும் அறிவியலையும் சமவிகிதத்தில் கலந்து இதனை உருவாக்கி அளித்துள்ளது பெருமை அளிப்பதாக கூறுகிறார்..
ஒரு நிஜ திரைப்படத்திற்குள், ஒரு நிஜ உலகிற்குள் நீங்கள் நுழைந்து அங்குள்ள ஆச்சர்யங்களை உணரும் ஒரு மாயதருணத்தை உருவாக்கி அளித்துள்ளதே தங்களது சாதனை என்று அடக்கத்துடன் கூறுகிறது பியாண்ட் பௌண்ட்ரீஸ் நிறுவனம்… 10 நிமிடங்கள் இந்த மாய உலகிற்குள் சென்று வர வெறும் 150 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. காலை 11 மணிமுதல் இரவு 10 மணி வரை இந்த த்ரில் அட்வெண்டசரை நீங்கள் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் கண்டுகளிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு ஆனி – 90875 21770