நடிகர் ரகுமான் மூன்று தலைமுறை இயக்குநர் களின் படங்களில் நடித்து வருபவர். அவர் ஒரு புதுமுக இயக்குநரை வியந்து புகழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் கார்த்திக் நரேன். இவர் குறும்பட உலகத்திலிருந்து திரையுலகிற்கு வந்திருப்பவர்.
இவர் இயக்கியுள்ள படம் ‘துருவங்கள் பதினாறு’ அந்தப்பட அனுபவம் பற்றி படத்தில் நடித்துள்ளநடிகர் ரகுமான் கூறும் போது.
” நான் சிவாஜி, மம்முட்டி, மோகன்லால், சிவகுமார் போன்ற பெரிய ஜாம்பவான்களுடன் நடித்து இருக்கிறேன். அஜீத், சூர்யா என இப்போதைய நடிகர்களுடனும் நடிக்கிறேன். பாலச்சந்தர், பத்ம ராஜன். பரதன் தொடங்கி நாலாவது தலைமுறையாக இப்போதைய குறும்படம் மூலம் வருகிற இயக்குநர்கள் படங்களிலும் நடிக்கிறேன். நான் பல படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறேன்.
நான் கடைசியாக நடித்த ‘பகடை ஆட்டம்’ படத்தில் கூட போலீஸ் இன்ஸ்பெக்டராகத்தான் நடித்து இருக்கிறேன் இந்நிலைலயில் ஓர் இளைஞர் என்னிடம் கதை சொல்ல வந்தார். அதுவும் போலீஸ் வேடம் என்றார்.என்னை விட்டு விடுங்கள் வேறு ஆளைப் பாருங்கள் என்று அவரைத் தவிர்த்தேன்.ஆள் வேறு பள்ளி மாணவன் போல இருந்தார். நம்பிக்கை வர வில்லை, எனவேதிருப்பி அனுப்பப் பார்த்தேன். நான் நிறைய புதுமுக இயக்குநர் படங்களில் நடித்து காயப்பட்டும் இருக்கிறேன்.பொதுவாக இப்போது இளைஞர்கள் கதையில்லாமல் விஷூவலில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அதனால் படம் ஏமாற்றமாகி விடுகிறது.
எனவே அவரைத் தவிர்க்கப் பார்த்தேன். இந்த வயதில் அனுபவம் இல்லாதவர்கள் எல்லாம் சினிமாவுக்கு வருகிறார்களே என்று நினைத்தேன். ஆனால் அவர் விடுவதாக இல்லை. நடித்தால் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.
சரியென்று வேண்டா வேறுப்பாக கதை கேட்டேன். கேட்டதும் பரவாயில்லை என்று தோன்றியது. இருந்தாலும் அப்போதுதான் ‘பகடை ஆட்டம்’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்து முடித்து இருந்தேன். உடனே அடுத்த படமும் போலீஸ் வேடமா என்று நினைத்தேன். ஆனால் கார்த்திக் நரேன் கதை சொன்னதுடன் என்னென்ன கேரக்டர்கள் என்று விளக்கி ஸ்டோரி போர்டு காட்டினார். யார் ஒளிப்பதிவாளர், யார்இசையமைப் பாளர், யார்ஒலிப்பதிவாளர் என்ற அவரது குழுவினர் அனைவரையும் அழைத்து வந்து அறிமுகப் படுத்தினார். அனிமேஷலில் ட்ரெய்லர், டீஸர் எல்லாமே லேப்டாப்பில் வீடியோவாக தயார் செய்து வைத்திருந்தார்கள். காட்டினார்கள்.
எத்தனைநாள் படப்பிடிப்பு எங்கெங்கு படப்பிடிப்பு என்று பக்காவாக ஷெட்யூல் போட்டு வைத்து இருந்தார்கள். நான் பல சந்தேகங்களைக் கேட்டேன்.கேள்வி கேட்டு மடக்கினேன். எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார்கள். அந்த திட்டமிடலுக்காகவே வியந்து ஒப்புக் கொண்டு நடித்தேன். படப்பிடிப்பும் திட்டமிட்டு நடந்தது. நவம்பர் 1ல் மாலை 6 மணிக்கு முடிப்பதாக திட்டம்,ஆனால் அன்று 4 மணி முன்னதாகவேபகல் 2 மணிக்கே முடித்துக்காட்டினார்கள். அவர்கள் கதை சொன்ன விதத்துக்காகவே நடித்தேன். இளைஞர்களில் கார்த்திக் நரேன் மாதிரி வியப்பூட்டும் இளைஞர்களும் இருக்கிறார்கள். என்னை எந்த கேள்வியும் கேட்க விடவில்லை. அந்த அளவுக்குத்தெளிவாக எல்லாவற்றையும் முடித்தார்கள்.” என்று பாராட்டுகிறார்