
பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கூடியதால் “கருத்த முத்து” மற்றும் “நீலக்குயில்” ஆகிய பிரபல மலையாள சின்னத்திறை தொடர்களிலும், சில மலையாள படங்களிலும் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார்.
மேலும் “நீதானா அந்த குயில்” என்ற தமிழ் திரைப்படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ள இவர் தற்போது “எதையும் செய்யோம்” உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடன இயக்குநராகவும், குணச்சித்திர நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.
கேரள நாட்டில் பிறந்தாலும் தமிழ் திரைப்படத்தை அதிகம் நேசிக்கும் இவர் ஆச்சி மனோரமாவின் நடிப்பை பார்த்து வியந்து அவரது ரசிகையாகவே மாறி விட்டார். அவரை ஒரு முறையேனும் நேரில் சந்திக்க ஆசைப்பட்ட இவரின் ஆசை நிறைவேராமல்
போனதை எண்ணி வருந்திய இவர் ஆச்சி மனோரமாவைப்போல ஒரு மிகச்சிரந்த குணச்சித்திர நடிகையாக தமிழ்த்துறையில் வலம் வர வேண்டும் என்பதே எனது லட்சியம் என்கிறார்.
