ஆபாசப்பட இயக்குநரின் அவசரத் திருமணம்!

velu-sherli.jpg1ஆபாசப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் – நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் நேற்று      (ஜூன்-3) காலை 10.25 மணியளவில் பத்திரிகையாளர்களின் முன்னிலையில் சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில்  நடைபெற்றது.

நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கிய ஒரு இயக்குநரின் காதல் டைரி திரைப்படம் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

மணமகள் – நடிகை ஷெர்லி தாஸ் வேலு பிரபாகரன் இயக்கிய வேலு பிரபாகரனின் காதல் கதை படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

velu-sherliஆபாசக்  குப்பையான ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ படத்தை ஓடவைக்கும் ஸ்டண்டாக இது இருக்கலாம் என்று பேசப்படுகிறது.